ENG vs IND: 5-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி எடுக்கவேண்டிய முக்கியமான 3 முடிவுகள் என்னென்ன?
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்தச் சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு நேற்று காலை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவும் பாசிட்டிவாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 5வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி எடுக்க வேண்டிய 3 முக்கிய முடிவுகள் என்னென்ன?
1.ரோகித் சர்மாவின் நிலை:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காமல் தனிமைப்படுத்தி கொண்டார். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையும் பாசிட்டிவாக வந்துள்ளது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் 36 மணிநேரமே உள்ள நிலையில் அவர் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே அவர் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
2.பொறுப்பு கேப்டன் யார்?
ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என்றால் இந்திய அணியின் கேப்டனாக யார் இருப்பார் என்ற முடிவையும் அணி நிர்வாகம் இன்று அறிவிக்க வேண்டும். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. துணை கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளதால் பும்ரா அணியின் கேப்டனாகும் வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது.
NEWS - Mayank Agarwal added to India’s Test squad as a cover for captain Rohit Sharma, who tested positive for COVID-19.
— BCCI (@BCCI) June 27, 2022
More details here - https://t.co/1LHFAEDkx9 #ENGvIND pic.twitter.com/f5iss5vIlL
3.போட்டிக்கான 11 பேர் கொண்ட அணி என்ன?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா இடம்பெறாவிட்டால் 11 பேர் கொண்ட அணியில் யார் யார் இருப்பார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ரோகித் சர்மாவிற்கு பதிலாக மயாங்க் அகர்வால் அல்லது கே.எஸ்.பரத் அணியில் எடுப்பதா என்று அணி நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாக தெரிகிறது. அப்படி இல்லை என்றால் சுப்மன் கில் உடன் புஜாரா அல்லது விஹாரி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது குறித்தும் ஆலோசனை செய்து வருகின்றனர். இவை தவிர ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் களமிறக்குவதா அல்லது ரோகித் ஆடாவிட்டல் கூடுதல் பேட்ஸ்மேனை அணியில் சேர்ப்பதா என்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகின்றனர். இந்திய அணி தொடர்பான இறுதி முடிவையும் அணி நிர்வாகம் இன்று எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்