ICC World Cup 2023: ஐயோ பாவம்... கிரிக்கெட் உலகையே மிரட்டிய இலங்கைக்கா இப்படியான நிலை..?
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலககோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பினை இலங்கை அணி தனது தொடர் தோல்விகளால் இழந்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலககோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பினை இலங்கை அணி தனது தொடர் தோல்விகளால் இழந்துள்ளது.
உலகம் முழுவதும் அதிகப்படியான மக்களால் விரும்பப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. இந்த கிரிக்கெட் போட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 ஓவர்கள் கொண்ட உலககோப்பை போட்டித் தொடரை நடத்தும். இதற்கு ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் மட்டும் நேரடியாக தகுதி பெறும். மற்ற அணிகள் தகுதிச் சுற்றில் போட்டியிட்டு உலகக்கோப்பையில் பங்கு பெறும்.
அவ்வகையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலககோப்பை போட்டியில், இலங்கை அணி நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பினை தனது தொடர் தோல்விகளால் தவறவிட்டுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தனது ஒருநாள் போட்டித்தொடரை இழந்துள்ளது. மொத்தம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டாவது போட்டி மட்டும் மழை காரணமாக கைவிடப்பட்டது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. அதேபோல், இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும், நியூசிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் தொடரை முழுமையாக இழந்த இலங்கை அணி, தனது உலக்கோப்பை கனவிலும், ஒரு சரிவை கண்டுள்ளது. இந்த தோல்வியால் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பினை இழந்துள்ளது எனலாம். இதனால் இலங்கை அணி நெதர்லாந்து, ஜிம்பப்வே, ஸ்காட்லாந்து, நேபாளம் மற்றும் ஓமன் நாடுகளுடன் தகுதிச் சுற்றுக்கு போட்டியிடவுள்ளது. இதில் வெற்றி பெற்ற பின்னரே உலக்கோப்பைக்குள் வரும்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அணி வேறு விதமாக இருந்தது. அதனைப் பார்த்து மிரளாத, இலங்கையை வீழ்த்த தனித் திட்டம் வகுக்காத அணியே இல்லை எனலாம். இப்படியான இலங்கை அணி உலக்கோப்பை என்றாலே, இன்னும் ஆக்ரோஷமாக களமாடியுள்ளது. அப்படி இருந்த இலங்கை அணி தற்போது உலக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பினை இழந்துள்ளது.
அதேபோல், இலங்கை அணி நியூசிலாந்து தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான் டெஸ்ட் தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை. மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் இழ்ந்தது. இந்த தொடரினை இலங்கை அணி மட்டும் மூன்றூ போட்டிகளையும் வென்றிருந்தால், உலக்கோப்பை டெஸ்ட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால், இலங்கை அணியின் நியூசிலாந்து பயணம் என்பது மிகவும் மோசமான பயணமாகவே இருந்துள்ளது. மீதமிருக்கும் டி20 போட்டித் தொடராவது இலங்கைக்கு வசப்படுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.