மேலும் அறிய

South Africa ODI World Cup: ’இந்த முறை என்ன செய்ய காத்திருக்கோ’ - கண்டம் விட்டு கண்டம் வந்தும் தென் ஆப்ரிக்காவைத் துரத்தும் கண்டம்

South Africa ODI World Cup: இதற்கு  முன்னர் தென் ஆப்ரிக்க அணியின் வரலாற்றில் மழை செய்த தரமான சம்பவங்களை இங்கே பார்க்கலாம். 

தென் ஆப்ரிக்க அணிக்கும் உலகக்கோப்பைத் தொடருக்கும் மழைக்கும் ஏதோ ஒரு பூர்வஜென்ம தொடர்பு இருக்கு என பலர் கூறும் அளவிற்கு வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. இதனால் தென் ஆப்ரிக்க அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. 

நிலமை இப்படி இருக்கும்போது இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்காக இந்தியா இல்லாது மற்ற 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்தியாவுக்கு வந்துவிட்டனர். இதில் அனைத்து நாடுகளும் லீக் போட்டிகள் துவங்கும் முன்னர் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளன. இதில் முதல் நாளான இன்று அதாவது செப்டம்பர் 29ஆம் தேதி மூன்று போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் தென் ஆப்ரிக்க அணியும் ஆஃப்கானிஸ்தான் அணியும் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த போட்டி கனமழை காரணமாக டாஸ் போடாமலே நிறுத்தப்பட்டது. இதனால் தென் ஆப்ரிக்க அணி ரசிகர்கள் தொடரின் தொடக்கத்திலேயே அதுவும் பயிற்சி ஆட்டத்திலேயே மழை பெய்துள்ளதால், இம்முறை தென் ஆப்ரிக்க அணி என்னென்ன சோதனைகளை சந்திக்கவுள்ளதோ என புலம்பிவருகின்றனர். 

South Africa ODI World Cup: ’இந்த முறை என்ன செய்ய காத்திருக்கோ’ - கண்டம் விட்டு கண்டம் வந்தும் தென் ஆப்ரிக்காவைத் துரத்தும் கண்டம்

இதற்கு  முன்னர் தென் ஆப்ரிக்க அணியின் வரலாற்றில் மழை செய்த தரமான சம்பவங்களை இங்கே பார்க்கலாம். 

ஒரு பந்துக்கு 22 ரன்கள்

1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியும் இங்கிலாந்தும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் - அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. எனவே போட்டி முடிவை எட்ட டக்வெர்த் லூயிஸ் முறை பின்பற்றப்பட்டது. அந்த விதிப்படி தென் ஆப்ரிக்க அணி 1 பந்தில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என அறிவிக்கப்பட்டதும் ஒட்டுமொத்த தென் ஆப்ரிக்க அணியின் உலகக்கோப்பைக் கனவும் நொருங்கிப்போனது. 

கடைசி ஓவர் சோகம்

1999ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்ரிக்க அணி ஆஸ்திரேலிய அணியை 213 ரன்களில் சுருட்டியது. அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி விக்கெட்டுகளை இழந்தாலும், இறுதி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை எனும் நிலையில் இருந்தது. கைவசம் ஒரு விக்கெட் மட்டும் இருந்தது. முதல் இரண்டு பந்தினை பவுண்டரிக்கு விரட்டிய தென் ஆப்ரிக்க அணி, கடைசி ஓவரின் 4வது பந்தில் 10வது விக்கெட்டை இழந்தது. இதனால் போட்டி டிரா ஆக, சூப்பர் சிக்ஸ் சுற்றில் சிறப்பாக செயல்பட்டதால் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மட்டும் இல்லாமல் கோப்பையையும் கைப்பற்றியது. 

South Africa ODI World Cup: ’இந்த முறை என்ன செய்ய காத்திருக்கோ’ - கண்டம் விட்டு கண்டம் வந்தும் தென் ஆப்ரிக்காவைத் துரத்தும் கண்டம்

மீண்டும் குறுக்கே வந்த மழை

2003ஆம் ஆண்டு உலகக்கோபையை தென் ஆப்ரிக்க அணி கென்யா மற்றும் ஜிம்பாவேவுடன் இணைந்து நடத்தியது. இதில் லீக் சுற்றில் இலங்கை அணிக்கு எதிராக தென் ஆப்ரிக்க அணி கட்டாய வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 268 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 45 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டியினை மேற்கொண்டு நடத்த முடியவில்லை. இறுதியில் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. 45வது ஓவரின் கடைசி பந்தினை எதிர்கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் பவுச்சர் ஒரு ரன் எடுத்து இருப்பார். அந்த பந்தில் அவர் இரண்டு ரன் எடுத்து இருந்தால் கூட தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றிருக்கும். 

South Africa ODI World Cup: ’இந்த முறை என்ன செய்ய காத்திருக்கோ’ - கண்டம் விட்டு கண்டம் வந்தும் தென் ஆப்ரிக்காவைத் துரத்தும் கண்டம்

சொந்த நாட்டுக்காரரால் சூனியம்

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தது. தென் ஆப்ரிக்க அணி நன்றாக விளையாடினாலே தொந்தரவு செய்ய வரும் மழை அன்றைக்கும் வந்தது. போட்டியின் 38வது ஓவரின்போது மழை வந்ததால் நீண்ட நேரம் போட்டி தடைபட்டது. இதனால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இறுதியில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு 43 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. நியூசிலாந்து அணி சிறப்பாக ரன்கள் சேர்த்து வந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்விக்கு அருகில் சென்றது. இதனால் முதல் முறையாக தென் ஆப்ரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறவுள்ளது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய எல்லியாட் என்ற வீரர் இறுதியில் அதிரடி காட்டினார். அவர் 73 பந்தில் 7 பவுண்டரி 3 சிக்ஸர் என 84 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியை வெற்றி பெறவைத்தார். ஆனால் எல்லியாட்டின் சொந்த நாடு தென் ஆப்ரிக்கா. அவர் அங்கு தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து அந்த அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். இந்த போட்டியின் தோல்விக்குப் பின்னர் ஒட்டுமொத்த  தென் ஆப்ரிக்க அணியும் மைதானத்தில் தேம்பி தேம்பி அழுததைப் பார்த்தபோது மிகவும் கவலை அடைந்தது கிரிக்கெட் ரசிகர் பட்டாளம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Embed widget