(Source: ECI/ABP News/ABP Majha)
Suryakumar Yadav:நட்புனா என்னானு தெரியுமா? தளபதி ஸ்டைல்! நெகிழ்ந்த சூர்யகுமார்
Suryakumar Yadav on Gautam Gambhir:டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் கௌதம் கம்பீர் உடனான தனது நட்பு பற்றி பேசியுள்ளார்.
இந்தியா - இலங்கை போட்டி:
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி நாளை ஜூலை 27 கொழும்புவில் நடைபெறுகிறது. முன்னதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி விளையாட உள்ள முதல் போட்டி இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.
என்னை அவர் புரிந்து கொள்கிறார்:
இந்நிலையில், டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் கௌதம் கம்பீர் உடனான தனது நட்பு பற்றி பேசியுள்ளார்.
𝗦𝘂𝗿𝘆𝗮𝗸𝘂𝗺𝗮𝗿 𝗬𝗮𝗱𝗮𝘃 𝘁𝗮𝗸𝗲𝘀 𝗴𝘂𝗮𝗿𝗱 𝗮𝘀 #𝗧𝗲𝗮𝗺𝗜𝗻𝗱𝗶𝗮'𝘀 𝗧𝟮𝟬𝗜 𝗰𝗮𝗽𝘁𝗮𝗶𝗻! 🧢#SLvIND | @surya_14kumar pic.twitter.com/KmWz84jZnP
— BCCI (@BCCI) July 26, 2024
இது தொடர்பாக அவர் பேசுகையில், "எனக்கும் கம்பீருக்குமான உறவு மிகவும் சிறப்பானது. கடந்த 2014 ஆம் ஆண்டு நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய போது அவரின் தலைமைக்கு கீழ் தான் விளையாடினேன். அப்போது அந்த அணிக்காக விளையாடியது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. எங்கள் நட்பு ஒரு பழமொழி போன்றது.
மற்றவர்கள் உங்களை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தால் நீங்கள் அவர்களை நோக்கி மூன்று அடி எடுத்து வைப்பீர்கள். அப்படித்தான் அந்த சமயத்தில் நானும் அவரும் பழகினோம். எங்கள் உறவு எப்போதும் போல் வலுவாக உள்ளது." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பயிற்சியின் போது நான் எப்படி விளையாடுவேன் என்னுடைய மன நிலை எப்படி இருக்கும் என்று அவருக்கு நன்றாக தெரியும். நான் என்னுடைய வேலையை எப்படி செய்கிறேன் பயிற்சியாளராக கம்பீர் அதை எப்படி அணுகுகிறார் என்பது எனக்கு தெரியும்." என்று கூறியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.
மேலும் படிக்க: Paris Olympics 2024:உலகத் தலைவர்கள் பங்கேற்கும் பாரீஸ் ஒலிம்பிக்; பிரதமர் மோடி பங்கேற்கிறாரா?
மேலும் படிக்க: Paris Olympics Sport Climbing: பாரீஸ் ஒலிம்பிக்.. இப்படி ஒரு போட்டியா! Sport Climbing-ன் விதிகள் என்ன?