(Source: ECI/ABP News/ABP Majha)
Shubman Gill: 35 டெஸ்ட் இன்னிங்ஸ்... அஸ்வினை விட கம்மியான ரன்கள் எடுத்த சுப்மன் கில்... என்னதான் ஆச்சு! விவரம் உள்ளே!
கடந்த 35 இன்னிங்ஸ்களில் 31.1 என்ற சராசரியில் மொத்தம் 994 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் இந்திய வீரர் சுப்மன் கில்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது.
இதில், டி 20 போட்டிகள் சமநிலை பெற்றது. ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.
இதில், முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி மிக மோசமாக விளையாடியது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் 245 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 131 ரன்களும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதோடு இந்த டெஸ்ட் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வியை பெற்றது இந்திய அணி. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிகவும் சொதப்பலாக விளையாடியது.
மோசமான ஆட்டம்:
அந்த வகையில் இந்திய அணியின் அதிரடி வீரராக பார்க்கப்படும் சுப்மன் கில் மோசமாக விளையாடினார்.
இரண்டு இன்னிங்ஸ்களிலுமே மோசமாக விளையாடிய அவர் முதல் இன்னிங்ஸில் 12 பந்துகள் களத்தில் நின்று 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸில் 37 பந்துகள் களத்தில் நின்று 26 ரன்களில் நடையைக்கட்டினார்.
அஸ்வினை விட குறைவான ரன்கள்:
முதல் 35 இன்னிங்ஸ்களில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை விட சுப்மன் கில் குறைவான ரன்களே எடுத்துள்ளார். அதன்படி, கடந்த 35 இன்னிங்ஸ்களில் 31.1 என்ற சராசரியில் மொத்தம் 994 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேநேரம் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தன்னுடைய முதல் 35 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் மொத்தம் 1006 ரன்கள் எடுத்து சுப்மன்கில்லை விட முன்னிலையில் இருக்கிறார்.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் இந்திய அணியின் சுப்மன் கில் பந்து வீச்சாளரை விட குறைவான ரன்கள் எடுத்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஸ்ரீகாந்த் 35 இன்னிங்ஸ்களில் 1035 ரன்களும் கபில் தேவ் 1023 ரன்களும் யுவராஜ் சிங் 1018 ரன்களும் தங்களுடைய முதல் 35 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Ambati Rayudu: அரசியலில் குதித்த அம்பதி ராயுடு.. எந்த கட்சியில் இணைந்தார் தெரியுமா? விவரம் இதோ!
மேலும் படிக்க: Rohit Sharma Test Duck: 2015-க்கு பிறகு டக் அவுட்... ஹிட்மேன் ரோகித் சர்மாவை மிரட்டிய இளம் பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா!