மேலும் அறிய

Rohit Sharma Test Duck: 2015-க்கு பிறகு டக் அவுட்... ஹிட்மேன் ரோகித் சர்மாவை மிரட்டிய இளம் பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2015க்குப்பின் 8 வருடங்கள் கழித்து டக் அவுட் ஆகியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா.

இந்தியா - தென்னாப்பிரிக்கா:

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. 

முன்னதாக, சென்சூரியனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரில் முதல் இன்னிங்ஸ் விளையாடி முடிக்கப்பட்டு தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடப்பட்டு வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது.

இதில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஜஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா , சுப்மன் கில் ஆகியோர் சொதப்பினாலும்,  அடுத்து வந்த விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர் ஓரளவிற்கு ரன்களை சேர்த்தனர். பின்னர், களமிறங்கிய கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அந்த வகையில்,  137 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.

அதனைத்தொடர்ந்து விளையாடி வந்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்கள் எடுத்தது. இதில், தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கிய ஐடன் மார்க்ராம் 5 ரன்களில் நடையைக்கட்டினார். மறுபுறம் பொறுமையாக விளையாடிய டீன் எல்கர் சதம் விளாசினார். 

டக் அவுட்டான ரோகித் சர்மா:

இந்நிலையில், இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் நிதனமாக விளையாடி இந்திய அணிக்கு ரன்களை சேர்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.  ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தென்னாப்பிரிக்க அணியின் இளம் பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா வீசிய பந்தில் கிளீன் போல்ட் ஆனார் ரோகித் சர்மா. :

8 வருடங்களுக்கு பிறகு:

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2015-க்குப்பின் 8 வருடங்கள் கழித்து டக் அவுட் ஆகியுள்ளார்.  தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 14, 6, 0, 25, 11, 10, 10, 47, 5, 0 என வெறும் 128 ரன்களை 12.80 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ள அவர் ஒரு முறை கூட அரை சதம் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித்தை மிரட்டும் ககிசோ ரபாடா:

அதேநேரம் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்  ககிசோ ரபாடா மறுபுறம் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மாவை டக் அவுட்டாக்கிய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை (14) அதிக முறை அவுட்டாக்கிய பந்து வீச்சாளர் என்ற சாதனையும் அவர் படைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க: Tamil Thalaivas:எங்கள மன்னிச்சுடுங்க... கண்டிப்பா அது நடக்கும்... நம்பிக்கை அளிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்!

 

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget