Watch Video : இதுதான் ஸ்போர்ட்மேன்ஷிப்..! களத்தில் நிரூபித்த இந்தியா..! சிக்கந்தர் ராஸாவை பாராட்டிய குல்தீப், இஷான் கிஷான், சுப்மன் .!
இந்திய அணிக்கு எதிராக அபார சதம் அடித்த சிக்கந்தர் ராசாவை இந்திய வீரர்கள் பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டித் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா களத்தில் இருந்த வரை இந்திய வீரர்கள் பீதியில் இருந்தனர் என்பதே உண்மை. ஏனென்றால் அவர் களத்தில் இருந்த வரை ஜிம்பாப்வே அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு 9 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டபோது ஷர்துல் தாக்கூர் பந்தில் சிக்கந்தர் ராசா கொடுத்த கடினமான கேட்ச்சை சுப்மன்கில் பிடித்து அசத்தினார்.
First with the bat and then with a diving catch, this man won our hearts more than once today 😍
— Sony Sports Network (@SonySportsNetwk) August 22, 2022
How good was this effort from @ShubmanGill to dismiss the dangerous Sikandar Raza? 🤩💯#ShubmanGill #ZIMvIND #TeamIndia #SirfSonyPeDikhega pic.twitter.com/u5snCqECBw
சுப்மன்கில் பந்தில் சிக்கந்தர் ராசா ஆட்டமிழந்த பிறகுதான் இந்திய வீரர்களுக்கு நிம்மதி பிறந்தது. அவர் ஆட்டமிழந்து சென்றபோது சிக்கந்தர் ராசாவின் அசாத்திய பேட்டிங்கை இந்திய வீரர்கள் நேரில் சென்று பாராட்டினர்.

அவர் ஆட்டமிழந்து சென்றவுடன் இந்திய வீரர்கள் இஷான்கிஷான், குல்தீப் யாதவ் சிக்கந்தர் ராசாவிடம் சென்று அவர் தோளில் தட்டி பாராட்டினர். அதேபோல, சிக்கந்தர் ராசா கொடுத்த கடினமான கேட்ச்சை பிடித்த பிடித்த சுப்மன்கில்லும் கைகொடுத்து சிக்கந்தர் ராசாவை பாராட்டினார். எதிரணி வீரர்களின் திறமையை பாராட்டுவதில் இந்திய வீரர்களை மிஞ்ச யாரும் இல்லை என்பது போன்ற நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக அமைந்தது.
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வீரர்களின் ஸ்போர்ட்மேன்ஷிப்பை ரசிகரகள் பாராட்டி வருகின்றனர். சிக்கந்தர் ராசா கடைசியாக ஆடிய 6 ஒருநாள் போட்டிகளில் அடித்த 3வது சதம் நேற்று விளாசியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று உறுதி... ஆசிய கோப்பையில் பங்கேற்பாரா?
மேலும் படிக்க : Team India Record: ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மாஸ்...! இந்தியா படைத்த புதிய சாதனை என்ன தெரியுமா..?




















