Sachin Tendulkar: காதல் திருமணம்.. பிளேபாயாக மாறுவாரோ என்ற பயம்! சச்சின் திருமணம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த அவரது மாமியார்
சச்சின் டெண்டுல்கர் மற்ற கிரிக்கெட் வீரர்களைப்போல் பிளேபாயாக மாறுவாரோ என்று பயந்தேன் என அவரது மாமியார் அன்னாபெல்லே மேத்தா கூறியுள்ளார்.
சச்சினின் காதல் திருமணம்:
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று போற்றப்படுபவர் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் இவர் படைத்த சாதனைகள் அனைவரும் அறிந்ததே. அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் என்றலே நடிகைகளுடன் தொடர்பு படுத்தி கிசுகிசுக்கப்படுவார்கள். ஆனால் சச்சின் டெண்டுல்கர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவராகவே விளங்கினார். அதேபோல் சச்சின் தன்னுடைய 28 வயதில் அஞ்சலி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. இந்நிலையில் இவர்களது திருமணம் குறித்து சச்சின் டெண்டுல்கரின் மாமியரும் அஞ்சலியின் தாயாருமான அன்னாபெல்லே மேத்தா சுவரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சச்சின் மீது ஏற்பட்ட பயம்:
அதில், இந்திய கிரிக்கெட் உலகில் சச்சின் மிகவும் பிரகாசமான நட்சத்திரம் என்று நான் அப்போதே கணித்திருந்தேன், ஆனால் அவர் தனது சக கிரிக்கெட் வீரர்களைப் போல ஒரு பிளேபாயாக மாறுவாரோ என்ற கவலை எனக்கு இருந்தது. தொண்ணூறுகளில் சச்சின் இங்கிலாந்தில் டேவிட் பெக்காம் போல இருந்தார்.
நான் அவரது கண்களைப் பார்த்து, என் மகளைப் பற்றி அவர் எப்படி உணர்ந்தார் என்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை கவர்ந்தது. நாங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம் என்ற சொன்னது மிகவும் பிடித்திருந்தது. அஞ்சலி நல்ல உயரமான கருப்பாக இருக்கும் பையனை திருமணம் செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன் ஆனால் அது நடக்கவில்லை"என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Paris Olympics 2024: நாடு திரும்பிய தங்கமகன் அர்ஷத் நதீம்..பாகிஸ்தான் அரசு அறிவித்த உயரிய விருது!
மேலும் படிக்க: Sanju Samson: ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன்? சஞ்சு சாம்சன் ஓபன் டாக்