Paris Olympics 2024: நாடு திரும்பிய தங்கமகன் அர்ஷத் நதீம்..பாகிஸ்தான் அரசு அறிவித்த உயரிய விருது!
பாகிஸ்தான் அரசு அர்ஷத் நதீமுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான 'ஹிலால்-இ-இம்தியாஸ்' விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
கடந்த ஜூலை 26 ஆம் தேதி பிரான்ஸில் தொடங்கியது பாரீஸ் ஒலிம்பிக் 2024. அதன்படி கடந்த 10 நாட்களாக நடைபெற்ற இந்த தொடர் இன்றுடன் முடிவடைகிறது. அந்தவகையில், புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை 39 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தை பிடித்தது.
38 தங்கம், 42 வெள்ளி, 42 வெண்கலப் பதக்கங்கள் என 122 பதக்கங்களை வென்ற அமெரிக்கா இரண்டாவது இடத்தையும், 18 தங்கம், 18 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களையும் வென்ற ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தையும், 18 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை வென்ற ஜப்பான் நான்காவது இடத்தையும், 16 தங்கம், 24 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் பிரான்ஸ் 5-வது இடத்தையும் பிடித்தது.
நாட்டின் இரண்டாவது உயரிய விருதை பெறும் நதீம்:
இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலத்துடன் மொத்தம் 6 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 71வது இடத்தை பிடித்தது. அதே நேரம் பாகிஸ்தான் ஒரு தங்கம் வென்று இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது. அதாவது பாகிஸ்தான் 62 வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் நாடு திரும்பினார்.
Arshad Nadeem meeting his mother ❤️❤️❤️
— M (@anngrypakiistan) August 11, 2024
abhī zinda hai maañ merī mujhe kuchh bhī nahīñ hogā
maiñ ghar se jab nikaltā huuñ duā bhī saath chaltī hai
pic.twitter.com/eAXGHrxLUg
அப்போது விமானத்தின் மூலம் தண்ணீர் பீய்ச்சி அவரை உற்சாகத்துடன் வரவேற்றது பாகிஸ்தான் அரசு. மேலும், நதீமை கவுரவிக்கும் வகையில், பாகிஸ்தான் அரசு அவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான 'ஹிலால்-இ-இம்தியாஸ்' விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: Wayanad Landslide: வயநாடு மக்களுக்கு நிதியுதவி அளித்த செஸ் மாஸ்டர் டி குகேஷ்! குவியும் பாராட்டு
மேலும் படிக்க: Paris Olympics 2024: ஒலிம்பிக்கிற்கான ரூ.470 கோடி வீணா? 32 ஆண்டுகளில் இல்லாத நிலை, எதிர்பார்ப்புகள் பலித்ததா?