IND vs SA 3rd T20 LIVE : IND vs SA 3rd T20 LIVE : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!
IND vs SA 3rd T20 LIVE : இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டி20 ஸ்கோர், அவுட் போன்றவற்றை உடனுக்குடன் இங்கே காணலாம்.
LIVE
Background
இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டேவிட் மில்லர் மற்றும் வான்டர் டுசென் அதிரடியால் வெற்றி பெற்றது.
Temba Bavuma calls it right at the toss and elects to bowl first in the 3rd T20I.
— BCCI (@BCCI) June 14, 2022
Live - https://t.co/mcqjkC20Hg #INDvSA @Paytm pic.twitter.com/GjMOOGsa5T
இதேபோல் ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய க்ளாசன் அரைசதம் அடிக்க தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற தென்னாப்பிரிக்கா அணியும், தோற்றால் தொடரை இழந்து விடுவோம் என்பதால் இந்திய அணியும் போராடும் என்பதால் இப்போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A look at the Playing XI for the 3rd #INDvSA T20I
— BCCI (@BCCI) June 14, 2022
Live - https://t.co/mcqjkC20Hg @Paytm https://t.co/quiGdAuBWZ pic.twitter.com/JdYsukd2Iw
இந்தியா Vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எங்கே ? எப்படி பார்க்கலாம் ?
போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 எச்டி சேனல்களில் பார்க்கலாம். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டியின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இரவு 7 மணி முதல் கிடைக்கும்.
இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன்)(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
IND vs SA 3rd T20 LIVE : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
IND vs SA 3rd T20 LIVE : வெற்றியை நோக்கி இந்திய அணி... விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா
இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 15 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.
IND vs SA 3rd T20 LIVE : 5 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா அணி..!
இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 180 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. அந்த அணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்துள்ளது.
IND vs SA 3rd T20 LIVE : ரன் குவிக்க தடுமாறும் தென்னாப்பிரிக்கா அணி..!
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரன் குவிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா அணி திணறி வருகிறது. அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பவுமா 8 ரன்களிலும், ஹென்ட்ரிக்ஸ் 23 ரன்களிலும் அவுட்டாயினர்.
IND vs SA 3rd T20 LIVE : தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 180 ரன்களை நிர்ணயித்தது இந்திய அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வீரர்கள் ருத்துராஜ் கெய்க்வாட் 57, இஷான் கிஷன் 54, ஹர்திக் பாண்ட்யா 31 ரன்கள் விளாசினர்.