மேலும் அறிய

SA Vs AFG LIVE Score: ஆஃப்கானிஸ்தானை ஊதித் தள்ளி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

SA Vs AFG World Cup 2023 Live Updates: ஆஃப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்ஸ்களுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.

LIVE

Key Events
SA Vs AFG World Cup 2023 LIVE Score Updates World Cup 2023 South Africa vs Afghanistan Match Highlights Scorecard CWC 2023 SA Vs AFG  LIVE Score: ஆஃப்கானிஸ்தானை ஊதித் தள்ளி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி
ஆஃப்கானிஸ்தான் அணி - உலகக்கோப்பை 2023

Background

SA Vs AFG World Cup 2023: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள்  மோதுகின்றன.

உலகக் கோப்பை:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 41 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்தியா, தென்னாப்ரிக்கா மற்றும் அஸ்திரேலியா ஆகிய அணிகள் தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன.  நியூசிலாந்து அணி நான்காவது இடத்தை கிட்டத்தட்ட்ர உறுதிசெய்து விட்ட நிலையில், சில கணக்குகளின் அடிப்படையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இன்னும் நூலிழை அளவு வாய்ப்பு இன்னும் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்ரிக்கா, 6வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் உடன் மோத உள்ளது.

தென்னாப்ரிக்கா - ஆப்கானிஸ்தான் மோதல்:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.  கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தென்னாப்ரிக்கா அணி ஒன்றில் மட்டுமே தோல்வியுற்றுள்ளது. அதேநேரம், கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்ரிக்கா அணி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், ஆப்கான்ஸ்தான் அணி இன்றைய போட்டியில் மிகப்பெரிய பிரமாண்ட வெற்றியை பெற்றால் மட்டுமே நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும். 

பலம் & பலவீனங்கள்:

தென்னாப்ரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அந்த அணியின் முக்கிய பலமாக இருக்க, பந்துவீச்சாளர்களும் எதிரணிக்கு கடும் நெருக்கடி தந்து வருகின்றனர். அந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.  குறிப்பாக முன்னாள் கேப்டன் டிகாக், அந்த அணியின் பேட்டிங் தூணாக ஜொலிக்கிறார்.  அதேநேரம், கடைசி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தோல்வியுற்றது குறிப்பிடத்தகக்து. மறுமுனையில் ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்துவீச்சை கொண்டு ஜாலம் நிகழ்த்தி வருகிறது. பேட்டிங்கிலும் முன்கள வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு அணியாக சேர்ந்து முயற்சித்து வெற்றியை வசப்படுத்துவது ஆப்கானிஸ்தானின் கூடுதல் பலமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி வாய்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்:

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 1 முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

மைதானம் எப்படி?

நரேந்திர மோடி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமைகிறது. அதேநேரம் போட்டியின் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்கள் சற்று நிலைத்து நின்று ஆட வேண்டியது குறிப்பிடத்தக்கது.

உத்தேச அணி விவரங்கள்:

தென்னாப்ரிக்கா:

குயின்டன் டி காக் , டெம்பா பவுமா (கேட்ச்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ஆண்டிலே பெஹுலுக்வாயோ, ககிசோ ரபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சி.

ஆப்கானிஸ்தான்:

ஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (c), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இக்ராம் அலிகில் (Wk), ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நவீன்-உல்-ஹக் மற்றும் நூர் அகமது

வெற்றி வாய்ப்பு: தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

22:09 PM (IST)  •  10 Nov 2023

SA Vs AFG LIVE Score: ஆட்டநாயகன்..!

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது தென்னாப்பிரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வன் டர் டசனுக்கு வழங்கப்பட்டது. 

21:53 PM (IST)  •  10 Nov 2023

ஆஃப்கானிஸ்தானை ஊதித் தள்ளி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

47.3 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் சேர்த்து வெற்றியை தனதாக்கியது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

21:46 PM (IST)  •  10 Nov 2023

SA Vs AFG LIVE Score: 47 ஓவர்கள் முடிந்தது..!

47 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டினை இழந்து 231 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

21:42 PM (IST)  •  10 Nov 2023

SA Vs AFG LIVE Score: 222 ரன்களில் தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணி 46 ஓவர்கள் முடிவில் 222 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. 

21:36 PM (IST)  •  10 Nov 2023

SA Vs AFG LIVE Score: 45 ஓவர்கள் முடிந்தது..!

45 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டினை இழந்து 212 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 33 ரன்கள் தேவைப்படுகின்றது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
Trump Vs Ukraine: உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
Trump Vs Ukraine: உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
Trump on FIFA: கனடா, மெக்சிகோவை பந்தாடும் ட்ரம்ப், ஃபிபா கால்பந்து குறித்து கூறியது என்ன.?
கனடா, மெக்சிகோவை பந்தாடும் ட்ரம்ப், ஃபிபா கால்பந்து குறித்து கூறியது என்ன.?
Stalin: தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..!  “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Embed widget