Ruturaj Gaikwad: கேப்டனாகும் ருத்ராஜ் கெய்க்வாட்.. தல தோனியின் பெயரை காப்பாற்றுவாரா? கொண்டாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்..!
Ruturaj Gaikwad: மகாராஸ்ட்ராவில் தொடங்கப்பட்டுள்ள எம்.பி.எல் போட்டியில் புனே அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஸ்ட்ரா கிரிக்கெட் சம்மேளம் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. இது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎல் தொடரினைப் போல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கும் இந்த போட்டி மகாராஸ்ட்ரா அளவில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, புனேயின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் ஜூன் 15ஆம் தேதி தொடங்குகிறது.
MCA தலைவர் ரோஹித் பவார் செய்தியாளர்களிடம், அணிகளுக்கான உரிமையாளர் ஏலத்தில், கிரிகெட் சங்கத்துக்கு 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து விருப்ப மனுக்கள் வந்துள்ளது. ஆறு அணிகளின் விற்பனை மூலம் 18 கோடி ரூபாயை நிர்வாகம் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அதைவிட மூன்று மடங்கு அதிகமாக கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் "ஆறு எம்பிஎல் அணிகள் ஒவ்வொன்றிற்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ 1 கோடி அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளோம், குறைந்தபட்ச மதிப்பு ரூ 18 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று ரோஹித் பவார் கூறினார். இன்று அணிகள் ஏலம் விடப்பட்ட பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஆறு அணிகளுக்கு ரூ.57.80 கோடி என்ற சாதனை உரிமையைப் பெற்றுள்ளோம். திறந்த ஏல முறை மூலம் அணியை வாங்குவதற்கு முற்றிலும் வெளிப்படையான செயல்முறையை நாங்கள் பின்பற்றினோம். எனவும் அவர் கூறினார்.
View this post on Instagram
MCA வெளியிட்ட அறிக்கையின்படி, போட்டிகள் ஐபிஎல் போட்டிகளைப் போல் நேரடியாக ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து பார்க்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் DD ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆன்லைன் தளங்களில் ஒளிபரப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புனேவின் பிரவின் மசலேவாலே புனே அணிக்கான உரிமையை கைப்பற்றினார் மற்றும் அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸின் ருதுராஜ் கெய்க்வாட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். புனிட் பாலன் குழுமத்தால் 11 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கோலாப்பூர் அணியை கேதர் ஜாதவ், அணியை கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.
இந்நிலையில் சென்னை அணியின் ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், சென்னை அணியின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த தொடரில் இவர் சிறப்பாக செயல்பட்டால் சென்னை அணிக்கான அடுத்த கேப்டன் யார் என்ற வரிசையில் ருத்ராஜும் இணையவுள்ளார் என்ற வரிசையில் சென்னை அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ருத்ராஜ் கெய்க்வாட் தனது நீண்ட கால காதலியான உத்கர்ஷா பவாரை சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.