மேலும் அறிய

Ruturaj Gaikwad Record: 52 பந்துகளில் சதம்: டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ருதுராஜ் செய்த சம்பவம்!

டி 20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ருதுராஜ் கெய்க்வாட்.

டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ருதுராஜ் கெய்க்வாட். அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

இந்தியா - ஆஸ்திரேலியா டி20:

ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது.

இந்நிலையில், மூன்றாவது  போட்டி இன்று (நவம்பர் 28) அசாம் மாநிலத்தில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல்லின் அதிரடியால் கடைசி ஓவர் த்ரில் வெற்றி பெற்றது.

முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி , இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களம் இறங்கினார்கள். 6 பந்துகள் களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி மட்டும் அடித்தார்.

பின்னர் 6 ரன்களில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் பந்தில் மேத்யூ வாடேயிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டினார். பின்னர் வந்த இஷான் கிஷன் ரன் ஏதும் இன்றி பெவிலியன் திரும்ப அடுத்து வந்த சூர்ய குமார் 29 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர்:

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினர். பின்னர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி, 52 பந்துகளில் சதம் அடித்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸரும், பவுண்டரியுமாக பறக்கவிட்டார்.

அதன்படி, மொத்தம் 13 பவுண்டரிகளையும், 7 சிக்ஸர்களையும் பறக்க விட்டார். கடைசி வரை களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்களை குவித்தார்.  முன்னதாக, கடைசி 13 பந்துகளில் 6 சிக்ஸர்களையும் 3 பவுண்டரிகள் என மொத்தம் 52 ரன்களை குவித்தார். இந்திய வீரர் ஒருவர் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்டை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Pakistan Cricket: பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மீண்டும் ஒரு மாற்றம்! பந்துவீச்சு பயிற்சியாளராக உமர் குல், சயீத் அஜ்மல் நியமனம்!

மேலும் படிக்க: ODI World Cup 2027: இன்னும் நான்கு ஆண்டுகளில் உலகக் கோப்பைத் திருவிழா! எந்த நாடு நடத்துகிறது..?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
Embed widget