மேலும் அறிய

Rohit - Shubman Gill: உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் வைத்த இந்திய தொடக்க ஜோடி! ரோகித் - சுப்மன் புதிய வரலாறு!

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள இந்திய தொடக்க ஜோடி என்ற புதிய சாதனையை ரோகித் சர்மா - சுப்மன்கில் படைத்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த தொடரில் முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றனர்.

ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டல்:

இந்த போட்டியில் இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா அபாரமான தொடக்கம் அளித்தார். அவரது அபாரமான தொடக்கத்தில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய கேப்டன் ரோகித்சர்மா 29 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒருநாள் போட்டிகளில் அபாரமான ஸ்ட்ரைக் ரைட் கொண்டுள்ள ரோகித் சர்மா, இன்றைய போட்டியிலும் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் வைத்தே அவுட்டானார். ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றிலே அதிகமான ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள இந்திய தொடக்க வீரர்கள் என்ற சாதனையை இந்திய வீரர்கள் படைத்துள்ளனர்.

தொடக்க வீரர்களாக சாதனை:

லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ரோகித்சர்மா 166.66 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று நடந்து வரும் போட்டியில் 162.06 ஸ்ட்ரைக் ரேட் வைத்து ஆட்டமிழந்தார். நெதர்லாந்து அணிக்கு எதிராக 159.37 ஸ்ட்ரைக் ரேட்டை சுப்மன்கில் வைத்திருந்தார்.  ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 155.95 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 136.50 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.

ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடரில் அதிகளவு ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள இந்திய தொடக்க வீரர்கள் என்ற சாதனையை ரோகித்சர்மா – சுப்மன்கில் ஜோடி படைத்துள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் டக் அவுட்டாகிய ரோகித் சர்மா அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு மிக்க உறுதுணையாக இருந்துள்ளார். அவருக்கு பக்கபலமாக மற்றொரு தொடக்க வீரர் சுப்மன்கில்லும் இருந்தார்.

மிரட்டல் தொடக்கம்:

இந்த உலகக்கோப்பைத் தொடரில் பவர்ப்ளேவில் அதிகளவு ரன்களை குவித்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித்சர்மா – சுப்மன்கில் ஜோடியே ஆகும். வலது கை – இடது கை கூட்டணியில் தொடக்க வீரர்களை அமைத்து வந்த இந்திய அணிக்காக வலது – வலது கை கூட்டணியாக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ரோகித்சர்மா – சுப்மன்கில் ஜோடி சிறப்பாக ஆடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Virat Kohli: அதிக ரன்கள், அதிக அரைசதம்... சாதனை மேல் சாதனை செய்யும் விராட் கோலி! விவரம் இதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
Embed widget