Watch video: பண்ட் அடித்த சிக்சர்.. காணாமல் போன பந்து ஏணி போட்டு தேடி எடுத்த சம்பவம் வைரல் வீடியோ
Watch video : சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக தனது முதல் சிக்சரை அடித்தார்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது, இந்த போட்டியில் பண்ட் சிக்சர் அடித்த பந்தை ஏணி போட்டு எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
பண்ட் காயம்:
சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ்சில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தடுமாறி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
இந்திய இன்னிங்ஸின் 37வது ஓவரில் ஸ்டார்க் இரண்டாவது பந்தை ஷார்ட் பாலாக மணிக்கு 144.6 கிமீ வேகத்தில் வீசினார். பண்ட் அதைத் தவிர்க்க முயன்ற போதும் அதிவேகத்தில் வந்த பந்து பந்தின் ஹெல்மெட்டில் தாக்கியது. , உடனே பிசியோ மைதானத்திற்கு வந்து பண்ட்டின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த நேரத்தில் ஆட்டம் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது, ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், ரிஷப் பண்ட்க்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை.
A scary moment 😱: Rishabh Pant's helmet bears the brunt of a blistering blow. 🤯#MitchellStarc #RishabhPant #AUSvIND #INDvsAUS #Cricket pic.twitter.com/b2Z1ExUdvr
— Akaran.A (@Akaran_1) January 3, 2025
பண்ட் அடித்த சிக்சர்:
இதற்கிடையில் பியூ வெப்ஸ்டரின் ஓவரில் ரிஷப் பண்ட் சிக்சர் அடித்தார். அவர் அடித்த சிக்சர் மைதானத்தின் உள்ளே சைட் ஸ்கீரின் அருகே விழுந்தது, பந்தானது மேலே விழுந்தது, நீண்ட நேரம் பந்தை தேடிய நிலையில் பந்து மேலே இருப்பதை கண்டு பிடித்தனர், பின்னர் அதை ஏணி போட்டு மேலே எறி எடுத்தனர்.
A six so big the ground staff needed a ladder to retrieve it!#AUSvIND pic.twitter.com/oLUSw196l3
— cricket.com.au (@cricketcomau) January 3, 2025
ஆனால் பண்ட் இறுதியில் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.