மேலும் அறிய

Rohit Sharma: ஆஸி.,க்கு சாதகமாக பேசிய ரிக்கி பாண்டிங்; அதிரடி ரியாக்‌ஷன் கொடுத்த ரோகித் சர்மா... என்ன சொன்னார் தெரியுமா?

ரிக்கி பாண்டிங்கின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அண்களுக்கு இடையிலான உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை அதாவது ஜூன் 7ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரோகித் சர்மாவின் இடது கட்டை விரலில் காயம் ஏற்படவே அவர் உடனடியாக பயிற்சியை கைவிட்டுவிட்டு வெளியேறினார். இதனால் அவரால் விளையாட முடியுமா முடியாதா என்ற கேள்விகள் அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தித்த ரோகித் சர்மா தனது ஓய்வு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுகளுக்கு பதில் அளித்தார். 

முதலில், ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக கூறியுள்ளாரே அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, ரிக்கி பாண்டிங்கிற்கு அவரது கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால் அது குறித்து நாங்கள் கவலைப் படவில்லை. இந்த உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து பலரும் பல கருத்துகளை கூறி வருகின்றனர். அவற்றையெல்லாம் மனதில் எடுத்துக்கொள்ளக் கூடாது. நமது அணி குறித்து நமக்கு தெரியும், மேலும், போட்டியின் நிலைமைக்கு ஏற்ற வகையில் நாம் சிறப்பாக விளையாடினால் வெற்றி நமக்கு சாதகமாகும் என கூறினார். இன்னும் ப்ளேயிங் லெவன் குறித்து முடிவு செய்யவில்லை. அது இன்று மாலை அணியில் தனி மீட்டிங் நடத்தி முடிவு எடுப்போம் என கூறினார். 

மேலும் அவரது ஓய்வு எப்போது என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர், நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்யும் போது, ​​நான் ஒன்று அல்லது இரண்டு சாம்பியன்ஷிப்களை வென்றால் நன்றாக இருக்கும் என கூறினார்.  ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்து கூறியுள்ளது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.  இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதமும் கிளம்பியுள்ளது. 36 வயதான ரோகித்சர்மா இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9 சதங்கள், 1 இரட்டை சதம், 14 அரைசதங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 3379 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார். 

ரோகித்சர்மா:

 இந்திய கேப்டன் ரோகித்சர்மா இதுவரை ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பைகளுக்காக 5 முறை இறுதிப்போட்டிகளில் ஆடியுள்ளார்

2007 டி20 உலககோப்பை:

2007ம் ஆண்டு நடந்த டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் முதன்முறையாக ரோகித்சர்மா சாம்பியன் கோப்பை ஒன்றிற்கான இறுதிப்போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில் 16 பந்தில் 30 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2013 சாம்பியன்ஸ் டிராபி:

மினி உலககோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபிக்காக 2013ம் ஆண்டு நடந்த போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் களமிறங்கிய ரோகித்சர்மா 14 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

2014 டி20 உலககோப்பை:

டி20 உலககோப்பையை 2வது முறையாக கைப்பற்றும் வாய்ப்பிற்காக இந்தியா 2014ம் ஆண்டு இலங்கையுடன் இறுதிப்போட்டியில் மோதியது. அந்த போட்டியில் ரோகித்சர்மா 26 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே ரோகித் எடுத்தார்.

2015 சாம்பியன்ஸ் டிராபி:

சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றுவதற்காக 2015ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித்சர்மா டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021:

கடந்த 2021ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 34 ரன்களும், 2வது இன்னிங்சில் 30 ரன்களும் ரோகித்சர்மா எடுத்தார்.

மேற்கண்ட போட்டிகளில் இந்திய அணி 2007 டி20 உலககோப்பையும், 2013 சாம்பியன் டிராபியையும் கைப்பற்றியது. மற்ற ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியையே தழுவியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget