Pakistan: ”ஒற்றுமையே இல்லை.. இப்படி பார்த்ததே இல்லை..” பாகிஸ்தான் டீமை கழுவி ஊற்றிய பயிற்சியாளர்
டி20 உலகக் கோப்பையில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. அவர்கள் அதை ஒரு அணி என்று அழைப்பதே மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்று அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற உள்ளன. அதன்படி, சூப்பர் 8 சுற்றுக்கு குரூப் - A வில் இந்தியா, அமெரிக்கா குரூப்- B யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து குரூப் C- யில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் குரூப் D யில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன.
பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தி:
முன்னதாக இந்த டி20 உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. மீதி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது அந்த அணி. வெற்றி பெற்ற போட்டிகளில் கூட போராடித்தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி மந்தமாக விளையாடியது ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே அந்த அணியில் கேப்டன்ஷியில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் வெற்றி பெற முடியாத சூழல் நிலவியதால் மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாமை நியமித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அதேபோல் பயிற்சியாளர்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மாற்றியது. அதன்படி, கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார்.
ஒற்றுமையே இல்லை.. இப்படி பார்த்ததே இல்லை:
இவர் பயிற்சியாளராக பொறுபேற்ற பின் பாகிஸ்தான் அணி விளையாடிய டி20 போட்டிகளிலும் சொதப்பியது. இதனால் கேரி கிர்ஸ்டன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. அதாவது, பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. ஆனால் அவர்கள் அதை ஒரு அணி என்று அழைப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அது ஒரு அணியே அல்ல.
அவர்கள் ஒருவரை ஒருவர் ஆதரிக்கவில்லை. அனைவரும் பிரிந்து கிடக்கின்றனர். நான் பல அணிகளுடன் வேலை செய்திருக்கிறேன். அங்கெல்லாம் நான் இப்படி ஒரு சூழலை பார்த்ததேயில்லை என்று கடும் அதிருப்தியை கேரி கிர்ஸ்டன் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதேபோல், பிட்னஸ் விசயத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் மோசமாக உள்ளதாகவும் அவர் கடிந்து கொண்டுள்ளார்.
மேலும் படிக்க: Viral Video : மாலத்தீவில் கடலில் தத்தளித்த தம்பதி.. உயிரை காப்பாற்றிய ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் வீரர்! வைரல் வீடியோ!
மேலும் படிக்க: "பாபர் அசாம் தகுதியற்றவர்" இந்திய முன்னாள் வீரர் சேவாக் ஆவேசம் - ஏன் அப்படி சொன்னார்?