IND vs ENG 4th Test: இன்னும் ஒரு விக்கெட் போதும்! புதிய மைல்கல்லை எட்டப்போகும் அஸ்வின்.. அப்படி என்ன..?
ராஞ்சியில் நடைபெறும் இங்கிலாந்து எதிரான 4வது டெஸ்டிலும் ரவிசந்திரன் அஸ்வின் மிகப்பெரிய சாதனை ஒன்றைய படைக்க இருக்கிறார்.
ராஜ்கோட்டில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500 விக்கெட்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம், இந்த சாதனையை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இப்போது, அடுத்து ராஞ்சியில் நடைபெறும் இங்கிலாந்து எதிரான 4வது டெஸ்டிலும் ரவிசந்திரன் அஸ்வின் மிகப்பெரிய சாதனை ஒன்றைய படைக்க இருக்கிறார். அதன்படி, இங்கிலாந்துக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை படைக்க உள்ளார்.
𝙏𝙝𝙖𝙩 𝙇𝙖𝙣𝙙𝙢𝙖𝙧𝙠 𝙈𝙤𝙢𝙚𝙣𝙩! 👏 👏
— BCCI (@BCCI) February 16, 2024
Take A Bow, R Ashwin 🙌 🙌
Follow the match ▶️ https://t.co/FM0hVG5pje#TeamIndia | #INDvENG | @ashwinravi99 | @IDFCFIRSTBank pic.twitter.com/XOAfL0lYmA
புதிய சாதனை:
ரவிசந்திரன் அஸ்வின் இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 99 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அடுத்து நடைபெறும் ராஞ்சி டெஸ்டில் அஸ்வின் ஒரு டெஸ்ட் விக்கெட்டையாவது எடுத்தால், இந்த சாதனை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெயரை பதிவு செய்வார். இங்கிலாந்துக்கு எதிரான இதுவரை எந்த ஒரு இந்திய பந்து வீச்சாளரும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவில்லை. இந்தியாவுக்காக பகவத் சந்திரசேகர் (95) மற்றும் அனில் கும்ப்ளே (92) ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் 90+ விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். இந்த இரண்டு சிறந்த பந்துவீச்சாளர்களாலும் 100 விக்கெட்டுகள் என்ற எண்ணிக்கை எட்ட முடியவில்லை.
அனில் கும்ப்ளே, பகவத் சந்திரசேகர் ஆகியோரை பின்னுக்கு தள்ளி, நடப்பு டெஸ்ட் தொடரிலேயே இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். அஸ்வின் இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக மொத்தம் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29.28 பந்துவீச்சு சராசரியில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த காலகட்டத்தில் அஸ்வின் 6 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்கள்:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய சாதனை பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஆண்டர்சன் டெஸ்டில் மொத்தமாக 145 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஆண்டர்சனின் சாதனையை அஸ்வின் முறியடிப்பது சாத்தியமில்லை. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் நிச்சயம் படைக்க இருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் டாப் 10 பவுலர்கள் பட்டியலில் அஸ்வின்:
கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்திய டாப் 10 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரவிசந்திரன் அஸ்வின் இடம் பிடித்துள்ளார், இந்த பட்டியலில் அஸ்வின் 9வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடன் முதலிடத்திலும், ஷேன் வார்னர் 708 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 696 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.