Ashwin on Jadeja:ஜடேஜா தான் பெஸ்ட்..கோலி, ரோஹித் எல்லாம் நெக்ஸ்ட்! அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின் திறமை வாய்ந்த வீரர் யார் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் அஸ்வின். தமிழ் நாட்டைச் சேர்ந்த இவர் ஐபிஎல் போட்டிகளில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இச்சூழலில் தான் விளையாடிய தருணத்தில் திறமை வாய்ந்த வீரர் ஜடேஜா தான் என்று கூறியுள்ளார்.
திறமை வாய்ந்த வீரர்:
இது தொடர்பாக அவர் பேசுகையில், "தான் பார்த்ததிலே மிகவும் திறமை வாய்ந்த வீரர் என்றால் அது ஜடேஜா தான். ஜடேஜாவுக்கு இயற்கையிலேயே பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என்று மூன்று பிரிவிலும் திறமை இருக்கின்றது. நாங்கள் பல ஆண்டுகள் இணைந்து விளையாடியதில் இருந்து எங்களுடைய உறவு முன்னேறியது. நாங்கள் இருவருமே மிகவும் வித்தியாசமானவர்கள். நாங்கள் இருவரும் புரிந்து கொண்டு பந்து வீச்சில், பார்ட்னர்ஷிப் அமைக்க சிறிது காலம் எடுத்துக் கொண்டது.
பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது:
வெளிநாடுகளில் விளையாடும் போது பிளேயிங் லெவனில் எனக்கு இடம் கிடைக்காது. இருந்த போதும் எங்கள் இருவருக்கும் எந்த ஒரு உறவில் பாதிப்பும் இல்லை. இது எங்கள் அணியில் உள்ள சிக்கலாக தான் கருதுகிறேன் தவிர ஜடேஜாவின் தவறு எதுவும் கிடையாது. ஜடேஜாவுக்கு நிகராக நான் எவ்வாறு சிறந்து விளங்க முடியும் என்பது குறித்து நான் யோசிக்க வேண்டும். இதற்காக ஜடேஜாவை நான் கடத்தி வீட்டில் வைத்திருக்கவா முடியும்.
நீங்கள் பொறாமை இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஆனால் களத்திற்கு தேவையான வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும். அணியில் 11 வீரர்கள் தான் இருக்க முடியும். நாங்கள் அனைவருமே ஒரே அணிக்காக தான் விளையாடுகிறோம். வாய்ப்பு கிடைக்காத வீரர்களை எப்படி கையாள்வது என்பது குறித்து யோசிக்க வேண்டும்"என்று கூறியுள்ளார்