Kieron Pollard Retirement: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பொல்லார்டு !-15 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் நிறைவு !
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் பொல்லார்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் வீரர் பொல்லார்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாடியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், “பல இளைஞர்களை போல எனக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு 10 வயது முதல் இருந்தது. அந்த கனவை நிறைவேற்றி நான் 15 ஆண்டுகாலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி உள்ளேன். என்னுடைய அறிமுக போட்டியை இன்று நான் நினைவு கொள்கிறேன். ஏனென்றால் என்னுடைய ஹீரோ பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2007ஆம் ஆண்டு நான் அறிமுக வீரராக களமிறங்கினேன். 2019ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை பெரிய கௌரவமாக கருதுகிறேன். எனக்கு துணையாக இருந்த வெஸ்ட் இண்ட்ஸ் அணி நிர்வாகம் தேர்வுக்குழு தலைவர் மற்றும் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
பொல்லார்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 15 ஆண்டுகளாக விளையாடி வந்தார். இவர் 2007ஆம் ஆண்டு முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்கினார். இவர் 123 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 2706 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் 101 டி20 போட்டிகளில் களமிறங்கி 1568 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்து வந்தார். கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்