Points Table TNPL 2023: முதலிடத்தில் கெத்துகாட்டும் கோவை.. திருச்சி ஆறிலும் தோல்வி.. புள்ளிபட்டியல் முழுவிவரம்!
இந்த வெற்றியின் மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து கொண்டது
தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2023 தொடரின் 24வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. அதேபோல், 25வது போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி, பா11சி திருச்சி அணியை தோற்கடித்தது. இந்த இரண்டு போட்டிகளும் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் நிறுவன மைதானத்தில் நடைபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து கொண்டது. இந்த சீசனில் இந்த அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியுடன் (12 புள்ளிகள்) ஆதிக்கம் செலுத்துகிறது. ஆறு போட்டிகளில் விளையாடி அதில் ஐந்தில் வெற்றிபெற்றுள்ள திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆறு போட்டிகளில் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ், பா11சி (Ba11sy) திருச்சிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, 4வது இடத்திற்கு முன்னேறியது.
(Siechem Madurai Panthers) சிசெம் மதுரை பாந்தர்ஸ் அணி மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றும், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 2 வெற்றியுடன் முறையே 5 மற்றும் 6வது இடத்தில் உள்ளன. சேலம் ஸ்பார்டன்ஸ் ஆறில் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. பா11சி (Ba11sy) திருச்சி அணி, தாங்கள் விளையாடிய 6 போட்டியில் ஆறாவது தோல்வியை சந்தித்து கடைசி இடத்தில் உள்ளது.
TNPL 2023 புள்ளிகள் அட்டவணை
எண் |
---|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
போட்டி சுருக்கம்:
டிஎன்பிஎல்-லின் 24வது போட்டியில் சீசெம் பாந்தர்ஸ் அணியும், லைக்கா கோவை கிங்ஸ் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்யவே, கோவை அணியின் பேட்டிங் செய்ய உள்ளே வந்தது. ஆரம்பம் முதலே அதிரடி பறக்க 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.
கோவை அணியில் அதிகபட்சமாக சச்சின் 67 ரன்களும், சுரேஷ் குமார் 64 ரன்களும் எடுத்திருந்தனர். மதுரை பாந்தர்ஸ் அணியில் குர்ஜப்னீத் சிங் மற்றும் ஸ்வப்னில் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய மதுரை அணி எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படவில்லை. சுரேஷ் லோகேஷ்வர் (41), கேப்டன் சி ஹரி நிஷாந்த் (33) ஆகியோர் மட்டுமே குறிப்பிட்ட ரன்களை எட்டினர். 18 ஓவர்கள் முடிவில் 164 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து மதுரை அணி தோல்வியை சந்தித்தது.