Emerging Women Cricketer 2021: 2021 ஐசிசியின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை - பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் தேர்வு
20 வயதான பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பாத்திமா சனா 2021 ஆம் ஆண்டில் ஆல்ரவுண்ராக அனைவரையும் கவர்ந்தார்.
பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் பாத்திமா சனா 2021 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சனா 23.95 சராசரியில் 24 விக்கெட்டுகளையும், 16 சர்வதேசப் போட்டிகளில் 16.50 சராசரியில் 165 ரன்களையும் எடுத்துள்ளார். 20 வயதான பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பாத்திமா சனா 2021 ஆம் ஆண்டில் ஆல்ரவுண்ராக அனைவரையும் கவர்ந்தார். ஒரு பந்துவீச்சாளராக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் மற்றும் எளிதில் ரன்களை சேர்க்கும் திறன் காரணமாக பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் முக்கியமான வீராங்கனையாக பார்க்கப்படுகிறார்.
சொந்தநாட்டில் சிறப்பாக விளையாடிய, சனா வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் எல்லா இடங்களிலும் ஆல்ரவுண்டராக ஜொலித்தார். கடந்த ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர் விளையாடிய 11 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தினார். Untold Stories 6 : முதல் ஹாட்ரிக்..! முதல் அர்ஜூனா விருது..! மறக்கப்பட்ட இந்திய மகளிர் கால்பந்தின் ரியல் சிங்கப்பெண் சாந்தி முல்லிக்...!
சனா லோயர்-ஆர்டர் பேட்டராகவும் நல்ல திறனை வெளிப்படுத்தியுள்ளார். 8-வது இடத்தில் பேட்டிங் செய்த அவர், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக முறையே 28*, 22*, மற்றும் 17* ரன்கள் எடுத்துள்ளார்.
சனாவின் மறக்க முடியாத ஆட்டம் கடந்த ஜூலை மாதம் கரீபியனில் காணப்பட்டது. ஏனெனில் அவர் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும், பாகிஸ்தான் டக்வெர்த் லூயிஸ் விதிப்படி வெற்றி பெற்றது. அந்தப்போட்டியில், 28 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டர் சனா. Akhtar on Virat Kohli: “கேப்டன் பதவியை விட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் : கோலி அனைவரையும் மன்னிக்க வேண்டும்” - அக்தர்
A new star is born 🌟
— ICC (@ICC) January 23, 2022
Fatima Sana ruled the roost in 2021 💪
More 👉 https://t.co/dO50jovOP2 pic.twitter.com/8fjFcxmFeG
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்