மேலும் அறிய

Asia Cup 2023: உடனே கூட்டத்தை கூட்டுங்க..! ஜெய்ஷா கருத்தால் ஆவேசப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா, ஆசிய கோப்பையை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது பேச்சு பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“ அடுத்தாண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பைத் தொடரை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா கூறியிருப்பது ஆச்சரியத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமோ அல்லது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடமோ எந்தவொரு ஆலோசனையும் இன்றி கூறப்பட்டது ஆகும்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு அவர் தலைமை தாங்கிய பிறகு, ஏசிசி குழு உறுப்பினர்களின் பெரும் ஆதரவுடன் பாகிஸ்தானுக்கு ஆசிய கோப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. தற்போது ஆசிய கோப்பையை மாற்றுவது பற்றிய ஜெய்ஷாவின் அறிக்கை ஒருதலைபட்சமாக இருப்பதாக  கூறப்பட்டுள்ளது. இது 1983ம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கப்பட்டதன் தத்துவத்திற்கு முரணானது.

இது ஆசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் சமூகங்களை பிளவுபடுத்தும் ஆற்றலை கொண்டது. மேலும், 2023ம் ஆண்டு இந்தியா நடத்தும் ஐ.சி.சி. உலககோப்பை மற்றும் 2024 -2031ம் ஆண்டுகளில் இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானின் வருகையை பாதிக்கும்.


Asia Cup 2023: உடனே கூட்டத்தை கூட்டுங்க..! ஜெய்ஷா கருத்தால் ஆவேசப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்..!

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரின் அறிக்கை குறித்து இதுவரை எந்தவொரு அதிகார தகவலையும், தெளிவுப்படுத்தலையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெறவில்லை. இந்த முக்கியமான விஷயம் குறித்து விவாதிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை கேட்டுக்கொண்டுள்ளது. “

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : IND vs PAK: நீங்க வரலை என்றால் நாங்களும் வரமாட்டோம்.. இந்தியாவை எச்சரிக்கிறதா பாகிஸ்தான்? காரணம் என்ன?

மேலும் படிக்க : Asia Cup 2023 : இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பது ஏன்..? பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கம்...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Embed widget