மேலும் அறிய

On this day in 2019: மறக்கமுடியாத தோனியின் ரன் அவுட்.. இந்தியாவே கலங்கிய தருணம்.. இன்றுவரை மறையாத மனவலி..!

முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முன்பிருந்த இந்திய கேப்டன்கள் எவராலும் சாதிக்க முடியாத, சாதிக்க நினைத்த பல்வேறு சாதனைகளை படைத்து இருந்தார்.

இந்திய அணிக்காக இரண்டு முறை உலகக் கோப்பை வென்று கொடுத்த முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி, இதே நாளில் தனது சர்வதேச கடைசி கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அத்தகைய போட்டியும் கடந்த 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்காக அமைந்தது. இந்த நாளை அவ்வளவு சீக்கிரம் எந்த ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் மற்றும் தோனி ரசிகரும் கடக்க முடியாமல் இன்றுவரை சமூக வலைத்தளங்களில் தங்களது வலியினை வெளிப்படுத்தி வருகின்றனர். 

முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முன்பிருந்த இந்திய கேப்டன்கள் எவராலும் சாதிக்க முடியாத, சாதிக்க நினைத்த பல்வேறு சாதனைகளை படைத்து இருந்தார். மேலும்,அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையையும் தோனி இன்றளவும் தனது கைப்பிடியில் வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட தோனி என்னும் மாவீரனுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் கொடுக்க நினைத்தது 2019 ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையைதான். கடந்த 2011ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, அதை சச்சினுக்கு பரிசளித்தது. அதேபோல், கோலி தலைமையிலான இந்திய அணி எப்படியாவது அந்த கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. 

அந்த உலகக் கோப்பை வரை சிறப்பாக விளையாடிய இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. இதன் காரணமாக ஐசிசி கோப்பையை கைப்பற்றும் விராட் கோலியின் படையின் ஆசை கனவாய் கலைந்தது. 

மறக்க முடியாத ஜுலை 10 :

2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் ஆரம்பத்தில் ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 95 பந்துகளில் 67 ரன்களும், ராஸ் டெய்லர் 90 பந்துகளில் 74 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணி 5 விக்கெட்கள் இழந்து 71 ரன்களுடன் தடுமாறியது. நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி அசத்தலாக பந்து வீசி தொடக்கதிலேயே 3 விக்கெட்களை கைப்பற்ற, இந்திய அணி 91 ரன்களுக்கு 6வது விக்கெட்டை இழந்தது. 

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் எம்.எஸ்.தோனியும், ரவீந்திர ஜடேஜாவும் தங்கள் அணியை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வரவும், வெற்றிக்காக போராட பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். தோனி 72 பந்துகளில் 50 ரன்களும், ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களும் எடுத்து 116 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் இந்திய அணிக்கு பெற்று தந்தனர். 

மிக முக்கியமான திருப்புமுனையாக 48வது ஓவரில் ஜடேஜாவை வெளியேற்றி டிரெண்ட் போல்ட் அசத்த, ஆட்டத்தின் 49வது ஓவரில், ஸ்கொயர் லெக் பகுதிக்கு தள்ளப்பட்டதை இரண்டு ரன்களாக மாற்ற தோனி முயற்சி செய்தார். 

அப்போது, மார்ட்டின் கப்டிலின் வீசியா த்ரோ நேராக ஸ்டெம்பை பதம் பார்க்க, மில்லி மீட்டர் கணக்கில் தோனி ரன் அவுட்டாகி நடையைக்கட்டினார். 48.3 வது ஓவரில் இந்திய அணி ஸ்கோர் 216, தோனி மட்டும் அன்று ரன் அவுட் ஆகாமல் இருந்து இருந்தால் நிச்சயம் அந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 2019 உலகக் கோப்பையை வென்று இருக்கலாம் என்று இன்றுவரை இந்திய ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர். 

அதோடு மட்டுமின்றி தோனி விளையாடிய கடைசி (ஜூலை 10) சர்வதேச கிரிக்கெட் போட்டியும் இதுவே. அதற்குபிறக்ய் தோனி எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2020ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி தோனி தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget