PAK vs AFG: பாகிஸ்தானின் தோல்விக்கு வில்லனே பாபர் அசாம்தான்.. எப்படி தெரியுமா..? இதில் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றியும் இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் பாதையும் மிகவும் கடினமாகிவிட்டது.
உலகக் கோப்பை 2023ல் பாகிஸ்தான் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 22வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றியும் இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் பாதையும் மிகவும் கடினமாகிவிட்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்தான் முக்கிய காரணம். பாகிஸ்தானின் தோல்விக்கு பாபர் வில்லன் என்றே சொன்னாலும் தவறில்லை. அது ஏன் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
முதல் காரணம்- பாபர் அசாமின் மெதுவான பேட்டிங்
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக் மற்றும் இமாம் உல் ஹக் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 56 ரன்கள் சேர்த்தனர். அப்துல்லா ஷபிக் ஒரு முனையில் இருந்து வேகமாக ரன்களை குவித்துக்கொண்டிருந்தார். ஆனால் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த பாபர் அசாம் மிக மெதுவாக ரன்களை குவித்து ஷபீக்கிற்கு அழுத்தம் கொடுத்தார். ரன் ரேட்டை அதிகரிக்க முயன்றபோது ஷபிக் அவுட்டானார்.
இதன் பிறகும் பாபர் ரன் வேகத்தை அதிகரிக்கவில்லை. பாபர் 11வது ஓவரில் இருந்து 42வது ஓவர் வரை பேட் செய்தார். ஆனால் அவரால் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பெரியளவில் தாக்குதல் பேட்டிங்கில் ஈடுபடவில்லை/ பாபர் அசாம் 92 பந்துகளில் 74 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த பேட்டிங்கின்போது பாபர் அசாமின் ஸ்டிரைக் ரேட் சுமார் 80 ஆக இருந்தது.அதேசமயம் செட் ஆன பிறகு, பாபர் அசாம் வேகமான வேகத்தில் ரன்கள் எடுத்திருக்க வேண்டும். பாபர் தனது அரை சதத்தை முடித்தவுடன் விரைவாக ரன் குவித்திருந்தால், ஸ்கோர் 300ஐ தாண்டியிருக்கும்.
இரண்டாவது காரணம் - மோசமான கேப்டன்சி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் மிகவும் மோசமாகவே கேப்டன்சியில் ஈடுபட்டார். ஆப்கானிஸ்தானின் விக்கெட்டுகள் சரியாமல் இருந்தபோது, பாபர் பந்துவீச்சாளர்களை சரியாகச் சுழற்றவில்லை, பின்னர் இரண்டாவது விக்கெட் 190 ரன்களில் விழுந்தபோது, அவர் பகுதி நேர பந்துவீச்சாளர் இப்திகார் அகமது மற்றும் லெக் ஸ்பின்னர் உசாமா மிர் ஆகியோரை பந்துவீச அழைத்தார். இதனால் உள்ளே வந்த புதிய பேட்ஸ்மேனுக்கு செட் ஆக நேரம் எடுத்து கொண்டனர். அத்தகைய சூழ்நிலையில், பாபர் இரு தரப்பிலிருந்தும் வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு தன்னால் முடிந்தவரை முயற்சி செய்திருக்க வேண்டும்.
மூன்றாவது காரணம்- தவறாக தேர்வு செய்யப்பட்ட அணி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட பாபர் அசாம் விளையாடும் பதினொருவரை சரியாக தேர்வு செய்யவில்லை என்றே கருத்தையும் கிரிக்கெட் ரசிகர்கள் முன்வைத்தனர். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், ஹரிஸ் ரவூப் அணியில் இடம் பெற்றிருந்தார். அதேசமயம் மொஹமட் வாசிம் ஜூனியருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம். இது தவிர, ஆடுகளத்தை கருத்தில் கொண்டு, ஆப்கானிஸ்தான் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்க முடிவு செய்த போது, பாபர் தனது விளையாடும் பதினொன்றில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை சேர்த்துக் கொண்டார். இதுவும் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.