IND Vs NZ: கடைசி நேரத்தில் பவுலிங்கில் மிரட்டிய முகமது ஷமி... இந்தியாவுக்கு 274 ரன்கள் இலக்கு வைத்த நியூசிலாந்து
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் இமாச்சல பிரதேசம் தர்மசாலவில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களமிறங்கினர். அதில் 9 பந்துகள் களத்தில் நின்ற டெவோன் கான்வே ரன் ஏதும் இன்றி விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்படி, முகம்மது சிராஜ் வீசிய 4-வது ஓவரில் பந்தை ஓங்கி அடித்தார் டெவோன். தனக்கு இடது புறமாக வந்த அந்த பந்தை ஸ்ரேயாஸ் அய்யர் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். அப்போது மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதனிடயே வில் யங்-கும் தனது விக்கெட்டை 17 ரன்களில் பறிகொடுத்தார்.
அதிரடி காட்டிய ஃபார்ட்னர்ஷிப்:
ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஜோடி அடுத்ததாக ஃபார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களது ஜோடியை பிரிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் திணறினர்.
8 வது ஓவருக்கு பிறகு 33 வது ஓவர் வரை இந்த ஜோடியை இந்திய அணியினரால் பிரிக்க முடியவில்லை. இவ்வாறக, 87 பந்துகள் களத்தில் நின்ற ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 75 ரன்கள் குவித்தார்.
அதேபோல், மறுபுறம் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார் டேரில் மிட்செல். மொத்தம் 127 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். அதன்படி, அவர் மொத்தம் 130 ரன்களை குவித்து முகமது ஷமி பந்தில் அவுட் ஆனார். இவர்களது ஜோடி 178 ரன்கள் வரை களத்தில் நின்றது.
அதிரடி காட்டிய முகமது ஷமி:
33 ஓவர்கள் வரை விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்திய அணி, பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுக்க துவங்கியது.
அதன்படி, மொத்தம் 10 ஓவர்கள் வீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 54 ரன்கள் மட்டுமே கொடுத்து மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில், மிட்செல் சான்ட்னர் மற்றும் மாட் ஹென்றியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்து அசத்தினார்.
குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் வீசி 73 ரன்களை அள்ளிக்கொடுத்த 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனிடையே, 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தற்போது 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த தொடரில் இதுவரை தோல்வியடையாத அணிகள் என்ற பெயருடன் இரு அணியும் இருக்கிறது.
அதேநேரம், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத அணி என்ற பெருமையை பெறும்.
மேலும் படிக்க: Ind Vs NZ World Cup 2023: 5வது வெற்றி? புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு? நியூசிலாந்துடன் இன்று மோதும் இந்தியா!
மேலும் படிக்க: SA Vs ENG Score LIVE: டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - தென்னாப்ரிக்கா அணி நிர்ணயிக்கப் போகும் இலக்கு என்ன?