Heinrich Klaasen: சிக்ஸர்களை சொல்லி சொல்லி அடிக்கும் கில்லி.. பவுலர்களுக்கு தொல்லை தரும் ஹென்ரிச் கிளாசன்..!
2023-ம் ஆண்டு ஹென்ரிச் கிளாசனின் பேட்டில் இருந்து இதுவரை 69 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. அதேசமயம் இவர் இந்த ஆண்டி 40 சிக்சர்களை அடித்து எதிரணிகளை திணறடித்துள்ளார்.
Heinrich Klaasen ODI Stats In 2023: தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசனுக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு ஹென்ரிச் கிளாசன் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறார். இந்த ஆண்டு இதுவரை இவர் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 815 ரன்கள் எடுத்துள்ளார். இதில், இவரது சராசரி 58.21 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 151.20 ஆக இருந்துள்ளது. இது தவிர ஹென்ரிச் கிளாசன் இந்த ஆண்டு 3 சதங்களும், இரண்டு முறை ஐம்பது ரன்களை கடந்துள்ளார்.
- 109(67) vs England.
— CricketMAN2 (@ImTanujSingh) October 24, 2023
- 90(49) vs Bangladesh.
Heinrich Klaasen in just Incredible in ODIs in this year, he has been brilliant in this World Cup as well - What a player, Absolute beast. pic.twitter.com/n5LExpW2gE
இந்த ஆண்டு ஹென்ரிச் கிளாசன் தீ பேட்டிங்..
2023-ம் ஆண்டு ஹென்ரிச் கிளாசனின் பேட்டில் இருந்து இதுவரை 69 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. அதேசமயம் இவர் இந்த ஆண்டி 40 சிக்சர்களை அடித்து எதிரணிகளை திணறடித்துள்ளார். தொடர்ச்சியாக, ஹென்ரிச் கிளாசன் இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்து வருகிறார். வங்கதேசத்துக்கு எதிராக ஹென்ரிச் கிளாசன் 49 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். இந்த அதிரடியான இன்னிங்ஸில் இவர் 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசினார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக ஹென்ரிச் கிளாசன் அபார சதம் அடித்திருந்தார். அதில், இங்கிலாந்துக்கு எதிராக 67 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். அந்த இன்னிங்ஸில் கிளாசன் பேட்டிங்கில் இருந்து 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
Quite incredible!! 😮😮😮#HeinrichKlaasen #SAvsBAN pic.twitter.com/JqJQ2Z17SM
— Cricbuzz (@cricbuzz) October 24, 2023
இந்த உலகக் கோப்பையில் ஹென்ரிச் கிளாசனின் ஆட்டம் எப்படி இருந்தது..?
Quinton De Kock - 174 (140).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 24, 2023
Heinrich Klaasen - 90 (49).
Aiden Markram - 60 (69).
South Africa post 382/5 after 50 overs - another outstanding batting display by Proteas. pic.twitter.com/yLrXOhXWOf
இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஹென்ரிச் கிளாசன் இலங்கைக்கு எதிராக 20 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 27 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தோல்வியை தழுவியது. அந்த போட்டியில், ஹென்ரிச் கிளாசன் 28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இருப்பினும், உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஹென்ரிச் கிளாசன் ஆறாவது இடத்தில் உள்ளார். இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஹென்ரிச் கிளாசன் 5 போட்டிகளில் 57.60 என்ற சராசரியில் 288 ரன்கள் எடுத்துள்ளார்.