ENG vs NED Match Highlights: 160 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி.. உலகக் கோப்பையில் 2வது வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து!
நெதர்லாந்து அணி 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்துவிட, இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பென் ஸ்டோக்ஸின் சதம், தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலனின் அபாரமான இன்னிங்ஸ் 87 ரன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் அரைசதம் என எட்டாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து, நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்தது.
340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமலாய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டை விட்டுகொடுத்து தடுமாற தொடங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய மேக்ஸ் ஓடொவ் 5 ரன்களில் ஏமாற்றம் அளிக்க, அடுத்ததாக வந்த அக்கரமேனும் டக் அவுட்டாகி நடையைக்கட்டினார். இதற்கிடையில், ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஸ்லீ பார்ரசி அவ்வபோது நெதர்லாந்து அணிக்கு ரன்களை தேடி தந்தார்.
18 ஓவர்களில் நெதர்லாந்து அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்களாக இருந்தபோது, 62 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த வாஸ்லீ பார்ரசி ரன் அவுட் முறையில் அவுட்டானார். தொடர்ந்து கேப்டன் எட்வட்ர்ஸ் மற்றும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் இணைந்து சிறந்த முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை விரட்ட தொடங்கினர். தேவையான நேரத்தில் பவுண்டரிகள் செல்ல, மெல்ல நெதர்லாந்து அணி 100 ரன்களை நோக்கி நகர்ந்தது.
England Defeated Netherlands By 160 Runs 🔥#ENGvsNED pic.twitter.com/E1qA2spHFm
— VINEETH𓃵🦖 (@sololoveee) November 8, 2023
அப்போது, மீண்டும் கேப்டன் எட்வர்ட்ஸுடன் நிதமானுரு இணைந்து ரன் வேட்டையை தொடங்கினர். ஆதில் ரஷித் வீசிய 28 வது ஓவரில் சிக்ஸரை பறக்கவிட்ட நிதமானுரு. நெதர்லாந்து அணி 28 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 42 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து மொயீன் அலி வீசிய 34 ஓவரில் வீழ், உள்ளே வந்த வான் பீக் 2 ரன்னில் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
அடுத்தடுத்து 3 விக்கெட்களை ஆதில் ரஷித் மற்றும் மொயீன் அலி வீழ்த்தினர். இதையடுத்து, நெதர்லாந்து அணி 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்துவிட, இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.