மேலும் அறிய

AUS vs ENG: நடையை கட்டிய நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து! அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஆஸ்திரேலியா!

உலகக் கோப்பைத் தொடரின் முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் தோற்ற இங்கிலாந்து தொடரை விட்டு வெளியேறியது.

உலகக் கோப்பைத் தொடரின் முக்கியமான போட்டி ஒன்றில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆஸ்திரேலியாவும், வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை பற்றி யோசிக்க முடியும் என்று இங்கிலாந்தும் களமிறங்கின.

287 ரன்கள் டார்கெட்:

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ட்ராவிஸ் ஹெட் 11 ரன்னிலும், வார்னர் 15 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து வந்த ஸ்மித் – லபுஷேனே ஜோடி அபாரமாக ஆடியது. இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா ஸ்கோரை உயர்த்தினர். ஸ்மித்தின் 44 ரன்கள், லபுஷேனேவின் 71 ரன்கள் ஆஸ்திரேலியா நல்ல நிலைக்கு கொண்டு சென்றது. கடைசியில் கிரீன் 47 ரன்களும், ஸ்டோய்னிஸ் 35 ரன்களும், ஜம்பா 29 ரன்களும் எடுக்க இங்கிலாந்துக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  

287 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி வீரர் பார்ஸ்டோ ஆட்டத்தின் முதல் பந்திலே கோல்டன் டக் ஆனார். அடுத்து வந்த ஜோ ரூட் 13 ரன்னில் அவுட்டானார். தொடக்க வீரர் மலன் – ஸ்டோக்ஸ் ஜோடி பொறுப்பாக ஆடினர். சிறப்பாக ஆடிய மலன் 50 ரன்களில் அவுட்டானார்.

ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்:

அடுத்து வந்த கேப்டன் பட்லர் 1 ரன்னில் அவுட்டானார். பின்னர், மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடினார். இருவரும் இணைந்து வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த தொடர் தொடங்கியது முதல் தடுமாறி வந்த ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனாலும், 90 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 64 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 2 ரன்னில் அவுட்டாக கிறிஸ் வோக்ஸ் மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், மொயின் அலி 43 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த டேவிட் வில்லி 15 ரன்னில் அவுட்டாக, சிறப்பாக ஆடிய கிறஸ் வோக்ஸ் 32 ரன்னில் அவுட்டானார். கடைசியில் 48.1 ஓவர்களில் 253 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது.

நடப்பு சாம்பியன் அவுட்

ஜம்பா சிறப்பாக வீசி 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க், ஹேசல்வுட் மற்றும் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ் 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா தங்களது அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய நிலையில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 7 போட்டிகளில் ஆடி 1 வெற்றி 6 தோல்வியுடன் 2 புள்ளிகளுடன் தொடரை விட்டு வெளியேறியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
Embed widget