மேலும் அறிய

ENG vs AFG: உலகக் கோப்பையில் இதுவரை இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தந்தவர்கள் யார்? யார்? பட்டியல் இங்கே!

உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் கண்டிப்பாக இந்த தொடரில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் என்று ரசிகர்களாலும், கிரிக்கெட் நிபுணர்களாலும் எதிர்பார்க்கப்பட்டது.

உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிறிய அணிகளாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் கண்டிப்பாக இந்த தொடரில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் என்று ரசிகர்களாலும், கிரிக்கெட் நிபுணர்களாலும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று நடந்த போட்டியில் மிகப்பெரிய அதிர்ச்சியாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தா் 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து ரசிகர்களின் தூக்கத்தை கலைத்துள்ளது. இந்த தொடர் தொடங்கும் முன் உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்று என கருதப்பட்ட அணிகளில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் ஒன்று ஆகும். இன்றைய தோல்வி இங்கிலாந்துக்கு பெரிய பின்னடைவு ஆகும்.

உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி தன்னை விட பலம் குறைந்த அணிகளிடம் தோற்பது இது ஒன்றும் முதன்முறை அல்ல. முதல் உலகக் கோப்பையில் இருந்து ஆடி வரும் இங்கிலாந்து அணி இதுவரை குட்டி அணிகளிடம் தோற்ற விவரத்தை கீழே காணலாம்.

1992ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக தோல்வி:

1992ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் மோதின. ஆல்ப்ரி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி கேப்டன் டேவ் மட்டும் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக இங்கிலாந்துக்கு 137 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, 137 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கேப்டன் கூச் டக் அவுட்டாக, போத்தம் 18 ரன்களில் அவுட்டாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியை ஃபேர்பிரதர் – ஸ்டீவர்ட் ஜோடி காப்பாற்ற முயற்சித்தது. ஆனாலும், ஃபேர்பிரதர் 20 ரன்களிலும், ஸ்டீவர்ட் 29 ரன்களிலும் அவுட்டாக 49.1 ஓவர்களில் 125 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. இதனால், ஜிம்பாப்வே 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2011 – வங்கதேச அணிக்கு எதிராக தோல்வி:

2011ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 225 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ட்ராட் 67 ரன்களையும். மோர்கன் 63 ரன்களை விளாசினர். 226 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய  வங்கதேச அணி இம்ருல் கையஸ் 60 ரன்கள் விளாச, கேப்டன் ஷகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுக்க, மகமுதுல்லா, இஸ்லாம் கடைசி கட்ட பேட்டிங்கால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2015 – வங்கதேசத்திறகு எதிரான தோல்வி:

2015ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிராக முதலில் இங்கிலாந்து பந்துவீசியது. தமிம் இக்பால், இம்ருல் கையஸ் 2 ரன்களில் அவுட்டாக செமியா 40 ரன்கள் எடுத்தார். மகமுதுல்லா – முஷ்பிகுர் ரஹிம் ஜோடி பொறுப்புடன் ஆடினர். சிறப்பாக ஆடிய மகமுதுல்லா 103 ரன்களும், ரஹீம் 89 ரன்களும் எடுக்க இங்கிலாந்துக்கு 276 ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பெல் 63 ரன்கள் எடுக்க அடுத்த வந்த வந்த வீரர்கள் சொதப்பினர். பட்லர் அதிரடியாக 65 ரன்கள் எடுக்க, வோக்ஸ் 42 ரன்களுக்கு அவுட்டானார். இதனால், கடைசியில் இங்கிலாந்து அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் வங்கதேசம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று 69 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை நடப்பு சாம்பியனான இங்கிலாந்து சந்தித்துள்ளது. இது இங்கிலாந்து ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA, T20 Worldcup Final: கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
Breaking News LIVE: டெல்லி நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்
Breaking News LIVE: டெல்லி நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA, T20 Worldcup Final: கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
Breaking News LIVE: டெல்லி நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்
Breaking News LIVE: டெல்லி நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
Liquor Prohibition Amendment Bill: பூரண மதுவிலக்கிற்கான ஆசை இருந்தும், சூழல் இல்லை - கடைகளை குறைத்தும் பயனில்லை - அமைச்சர் முத்துசாமி
Liquor Prohibition Amendment Bill: பூரண மதுவிலக்கிற்கான ஆசை இருந்தும், சூழல் இல்லை - கடைகளை குறைத்தும் பயனில்லை - அமைச்சர் முத்துசாமி
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Embed widget