மேலும் அறிய

NZ Vs SL World Cup 2023: அரையிறுதிக்கு தகுதிபெறுமா நியூசிலாந்து? இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை

NZ Vs SL World Cup 2023: உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

NZ Vs SL World Cup 2023: பெங்களூருவில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள்  மோதுகின்றன.

உலகக் கோப்பை:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 40 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்தியா, தென்னாப்ரிக்கா மற்றும் அஸ்திரேலியா ஆகிய அணிகள் தங்களது அரையிறுதி வாய்ப்பௌ உறுதி செய்துள்ளன.   மீதமுள்ள ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கடுமையாக மோதி வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து, 9வது இடத்தில் உள்ள இலங்கை உடன் மோத உள்ளது.

நியூசிலாந்து - இலங்கை மோதல்:

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.  கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தோல்வியுற்றுள்ளது. அதேநேரம், கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும். இதனால், அந்த அணிக்கு இன்றைய போட்டி வாழ்வா? சாவா? எனும் சூழலில் அமைந்துள்ளது.

பலம் & பலவீனங்கள்:

தொடர்ந்து நான்கு வெற்றிகளை பதிவு செய்து வந்த நியூசிலாந்து அணி, திடீரென பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. அடுத்தடுத்து தோல்விகளால் துவண்டுபோயுள்ளது. ரச்சின் ரவீந்திரா, டெவன் கான்வே மற்றும் வில்லியம்சன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். இருப்பினும் கடந்த சில போட்டிகளாக அந்த அணியின் பந்துவீச்சு என்பது மோசமாக உள்ளது. கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய சூழலில் நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் களமிறங்கும் சூழலில், அவர்களின் செயல்பாடு களத்தில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங் சரியாக அமைந்தால் பந்துவீச்சில் சொதப்புகின்றனர். பந்துவீச்சு சரியாக அமைந்தால் பேட்டிங்கில் சோபிக்க தவறுகின்றனர்.

நேருக்கு நேர்:

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 101 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து அணி 51 முறையும், இலங்கை அணி 41 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிய, 8 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

மைதானம் எப்படி?

இந்தியாவில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமான மைதானங்களில் பெங்களூரு சின்னசாமி மைதானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிறிய பவுண்டரிகள் மற்றும் அதிவேகமான அவுட்-பீல்ட் காரணமாக இங்கு பேட்டிங் செய்ய வீரர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், போட்டி செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் களத்தில் சிறிது ஆதரவு கிடைக்கும்.

உத்தேச அணி விவரங்கள்:

நியூசிலாந்து:

டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டாம் லாதம், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட் 

இலங்கை:

பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க 

வெற்றி வாய்ப்பு: நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget