Nicholas Pooran: 'நல்லவேளை உசுருக்கு எதுவும் ஆகல’ - பிரண்டன் கிங்கிடம் தர்ம அடி வாங்கிய நிக்கோலஸ் பூரன் - வைரலாகும் புகைப்படம்
Nicholas Pooran: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் வென்றது.
![Nicholas Pooran: 'நல்லவேளை உசுருக்கு எதுவும் ஆகல’ - பிரண்டன் கிங்கிடம் தர்ம அடி வாங்கிய நிக்கோலஸ் பூரன் - வைரலாகும் புகைப்படம் Nicholas Pooran Shows Bruises Off Brandon King Shot & Arshdeep Singh Delivery In 5th T20I INDvsWI Nicholas Pooran: 'நல்லவேளை உசுருக்கு எதுவும் ஆகல’ - பிரண்டன் கிங்கிடம் தர்ம அடி வாங்கிய நிக்கோலஸ் பூரன் - வைரலாகும் புகைப்படம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/14/896c596da5f3f6bf5d63f7b12f6810b31692028938887102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Nicholas Pooran: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் வென்றது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற 5வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரண்டன் கிங் பேட்டிங் செய்து கொண்டு இருக்கும்போது, அப்போது எதிர் திசையில் நின்று கொண்டிருந்தார் நிக்கோலஸ் பூரன். இந்திய வீரரால் வீசப்பட்ட பந்தை பிரண்டன் கிங் வேகமாக அடிக்க அது, எதிர் திசையில் நின்று கொண்டு இருந்த பூரன் மீது பலமாக பட்டது. இதனால் அவருக்கு நன்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
அதேபோல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பந்து வீசினார். அப்போது பேட்டிங் செய்து கொண்டு இருந்த பூரன் மீது 145 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்துபடவே, அப்போதும் பூரனுக்கு காயம் ஏற்பட்டது.
The after effects 😂 thank you brandon king and arsdeep. pic.twitter.com/7jOHS46NSr
— NickyP (@nicholas_47) August 14, 2023
இந்த போட்டி முடிந்த பின்னர் சிக்கோலஸ் பூரன் தனது டிவிட்டர் பக்கத்தில், தனக்கு ஏற்பட்ட காயத்தை புகைப்படமாக பிடித்து பிரண்டன் கிங்கிற்கும் அர்ஷ்தீப் சிங்கிற்கும் நன்றி என கிண்டலாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது மிகவும் வைரலாகிக்கொண்டுள்ளது. இதற்கு இணைய வாசிகள் கமெண்ட்டுகளை வாரி இரைத்து வருகின்றனர்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 171 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியோடு சேர்த்து தொடரையும் வென்றது. இந்த தொடரில் பூரன் ஐந்து டி 20 போட்டிகளிலும் விளையாடி, 141.94 ஸ்டைக் ரேட்டில் 176 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் நிக்கோலஸ் பூரன் தான்.
Asia Cup 2023: நம்பிக்கையோட இருங்க.. ஆசிய கோப்பை இந்தியாவுக்குதான்; டிராவிட் சொன்ன ஹேப்பி நியூஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)