New Zealand Record: 3 ஆண்டுகளாக அசைக்க முடியாத அணியாக வலம்.. உள்நாட்டு தொடரில் கெத்துகாட்டும் நியூசிலாந்து..!
சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற அணி என்ற சாதனையை நியூசிலாந்து அணி படைத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. நியூசிலாந்து அணிக்கு போட்டியை வெல்வதற்கு டாம் லாதம் மற்றும் கேன் வில்லியம்சன் முக்கிய பங்கு வகித்தனர், இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. என்ன சாதனை படைத்துள்ளது என்பதை கீழே பார்க்கலாம்.
சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டி வெற்றிகள்:
நியூசிலாந்து அணி தனது சொந்த மண்ணில் தொடர்ந்து 13வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. அதேபோல், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற அணி என்ற சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணியின் இந்த தொடர் வெற்றி கடந்த 2019 பிப்ரவரியில் தொடங்கியது. அப்போது தொடங்கிய இந்த வெற்றி பயணம் தற்போதுவரை நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை நியூசிலாந்து அணி தொடர்ந்து 12 உள்நாட்டு ஒருநாள் போட்டிகளில் வென்றது. இதையடுத்து, நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற இரண்டாவது தொடர் வெற்றி இதுவாகும்.
ஆக்லாந்து ஒருநாள் போட்டியில் லாதம் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் செய்த சாதனைகளின் பட்டியல்
- நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்கு எதிரான அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்
இந்தியாவிற்கு எதிராக டாம் லாதம் ஆட்டமிழக்காமல் 145 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை வெற்றிபெற செய்தார். இதன்மூலம் இந்தியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுவாகும். கடந்த 1999 இல் ராஜ்கோட்டில் முன்னாள் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் நாதன் ஆஸ்டலை சௌத்பா 120 ரன்களை அடித்ததே இதற்கு முன்பு அதிகபட்சமாக இருந்தது.
- இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்துக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச பார்ட்னர்ஷிப்
லாதம் மற்றும் வில்லியம்சன் இடையேயான உடைக்கப்படாத 221 ரன்கள் பார்ட்னர்ஷிப், இப்போது நியூசிலாந்திற்கு ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக இதுவரை இல்லாத அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக பதிவானது.
முன்னதாக, 2017ல் மும்பை வான்கடே மைதானத்தில் லாதம் மற்றும் ராஸ் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்து இருந்தனர்.
- ஈடன் மைதானத்தில் அதிவேக சதம்
டாம் லாதம் 76 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த சாதனையை சமன் செய்தார். இலங்கையின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா 2001ல் நியூசிலாந்துக்கு எதிராக இதே சாதனையை 76 பந்துகளில் நிகழ்த்தினார்.
நியூசிலாந்து வெற்றி:
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி ஆக்லாண்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 80 ரன்களும், ஷிகர் தவான் 72 ரன்களும், சுப்மன் கில் 50 ரன்களும் அடித்தனர். இறுதியாக வாஷிங்டன் சுந்தரும் 16 பந்தில் 37 ரன்கள் எடுத்து அதிரடிகாட்ட இந்திய அணி 300 ரன்களைக் கடக்க உதவியாக இருந்தது. 307 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது.
307 ஸ்கோரைத் துரத்திய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் 88 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் அதன் பிறகு வில்லியம்சன் மற்றும் லாதம் ஆகியோர் தங்கள் அணியை வெற்றிபெறச் செய்தனர்.
லாதம் ஆட்டமிழக்காமல் 104 பந்துகளில் 145 ரன்கள் எடுத்தார். இது அவரது அதிகபட்ச தனிப்பட்ட ஒருநாள் இன்னிங்ஸ் ஆனது. மறுபுறம் வில்லியம்சன் 98 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார்.