Watch Video: ஐபிஎல் கலாட்டா... கோயிலுக்கு விசிட் அடித்த தோனி... சாமியை மறந்த ரசிகர்கள்...! - வைரல் வீடியோ..!
இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற கேப்டன் எம்.எஸ். தோனி உலகம் முழுவதும் ஒரு ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.
ஐபிஎல் 2022க்கு முன்னதாக ஜார்கண்டில் உள்ள ஒரு கோயிலுக்கு தோனி சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
2022 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஜார்கண்டில் உள்ள பூண்டுவில் உள்ள தியோரி கோயிலுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான எம்எஸ் தோனி சென்றுள்ளார். இணையத்தில் வெளிவந்துள்ள வீடியோ ஒன்றில் தோனியின் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுப்பதைக் காணலாம். பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக தோனியை 12 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற கேப்டன் எம்.எஸ். தோனி உலகம் முழுவதும் ஒரு ஹீரோவாக பார்க்கப்படுகிறார். அவரை நேரில் சந்தித்தால் ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்பதையும், எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பதையும் வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.
ஐபிஎல் 2022 தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் நேற்று பிற்பகல் ராஞ்சியில் உள்ள தியோரி கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் தங்களிடம் இருந்த செல்போனை எடுத்து புகைப்படம் எடுத்தனர். 40 வயதான அவர் ஒரு கடவுள் நம்பிக்கை கொண்டவராக அறியப்படுகிறார். இதற்கு முன்பும் தோனி கோயிலுக்கு சென்றுள்ளார். அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியுள்ளன.
வீடியோ:
Today MS Dhoni went to Dewri Mandir temple ahead of IPL 2022 ! 🤩❤️#MSDhoni • #IPL2022 • #WhistlePodu pic.twitter.com/Q3kbGZasoJ
— Nithish Msdian (@thebrainofmsd) February 14, 2022
15 ஆவது ஐபிஎல் தொடரில் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் மீண்டும் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஐபிஎல் 2022 ஏலத்திற்கு முன்னதாக, தோனியை 12 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டது. ரவீந்திர ஜடேஜாவை 16 கோடிக்கு சிஎஸ்கே தக்கவைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றில் தோனியை விட அதிக விலைக்கு மற்ற வீரர் தக்கவைக்கப்படுவது இதுவே முதல் முறை.
தோனி தலைமையில் விளையாடும் தீபக் சாஹரை தங்கள் அணியில் தக்கவைக்க 14 கோடி ரூபாய் செலவழித்தது. இதன் மூலம், ஐபிஎல் ஏல வரலாற்றில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸின் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை சாஹர் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக, சாஹர் இப்போது ஐபிஎல் ஏல வரலாற்றில் யுவராஜ் சிங்குடன் இணைந்து அதிக விலைக்கு வாங்கப்பட்ட மூன்றாவது இந்தியர் ஆவார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்