MS Dhoni: சச்சினுக்கு அடுத்து தோனிக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்: பிசிசிஐயின் அதிரடி முடிவு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 7-ம் நம்பர் ஜெர்ஸிக்கு ஓய்வு அளித்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 7-ம் நம்பர் ஜெர்ஸிக்கு ஓய்வு அளித்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்கமுடியாத பெயர் சச்சின் டெண்டுல்கர். அவரின் அபார ஆட்டங்களால் பல சாதனைகளை படைத்துள்ளார். அவரால் இந்தியாவே பெருமிதம் கொள்ளும் அளவுக்கு பல வரலாறுகளையும் படைத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. இதனால் சச்சின் டெண்டுல்கர் அணிந்து வந்த ஜெர்ஸியின் நம்பர் 10. சச்சினுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின்பு 10ஆம் நம்பர் ஜெர்ஸிக்கு பிசிசிஐ ஓய்வு அளித்தது. அதன்பின்னர் அந்த நம்பரை பிசிசிஐ யாருக்கும் வழங்கவில்லை.
Good morning Dhoni Nation!#MSDhoni #MSDhoni𓃵 pic.twitter.com/QYSXj4uMUP
— ⤿ 𝗞𝘂𝗺𝗮𝗿 𝗦𝗵𝗮𝗻𝘂⤾♘ (@BadDragon_05) December 15, 2023
அதன்படி சச்சின் வழி வந்தவர்களில் முக்கியமானவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி. சச்சினுக்கு பிறகு சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கிரிக்கெட்டில் ஒருவரது பெயரை சொல்ல வேண்டுமானால் அது தோனியாகத்தான் இருக்க முடியும். அந்த அளவு இந்திய அணியை வேறு லெவலுக்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றியவர்.
எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர், சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் பல தொடர்களையும் தன் வசமாக்கி பெருமிதம் சேர்த்தார் தோனி. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக தோனியின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவரது ஜெர்ஸி நம்பர் 7 க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி தோனியின் 7 நம்பர் ஜெர்ஸியை யாரும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.