MS Dhoni: ராஞ்சி தெருக்களில் ஜாலியாக பைக்கில் சுற்றும் தல தோனி.. வைரல் வீடியோ!
ராஞ்சியில் எம்.எஸ்.தோனி பைக் ஓட்டி செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜாலியாக சுற்றும் தல தோனி:
கடந்த மாதம் ஐபிஎல் சீசன் 17 நடைபெற்றது. இதில் மே 18 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இதனைத்தொடர்ந்து தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார் எம்.எஸ்.தோனி. இதனைத்தொடர்ந்து வெளிநாடுகளில் தோனி தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது மனைவி சாக்ஷி சமூகவலைதளங்களில் வெளியிட்டார். சுற்றுலாவை முடித்துக் கொண்டு மீண்டு ராஞ்சி திரும்பிய தோனி, தான் செல்லமாக வளர்க்கும் நாய்களுடன் நேரத்தை செலவிட்டார். இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியானது.
வைரல் வீடியோ:
MS Dhoni on his bike in Ranchi. 🐐 pic.twitter.com/3mDIcIOWRJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 21, 2024
இந்நிலையில்தான் இன்று (ஜூன் 21) தோனி தொடர்பான புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வெள்ளை நிற யமஹா பைக்கில் ஜாலியாக ரைட் செய்கிறார். இதனை ரசிகர்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இது போன்ற வீடியோக்கள் அடிக்கடி வெளியாவது ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.
தோனியின் பைக் கலெக்சன்:
தோனிக்கு கிரிக்கெட், குடும்பத்துக்குப் பிறகு மிகவும் பிடித்தது பைக்குகள்தான். தோனியின் பைக் கலெக்ஷன் பற்றி உலகமே அறியும். சுஸூகி ஷோகன், நார்டன் ஜூப்ளி 250, யமஹா RD350, ராஜ்தூத், BSA கோல்டு ஸ்டார் போன்ற வின்டேஜ் பைக்குகளில் தொடங்கி லேட்டஸ்ட்டான 80 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நின்ஜா H2 சூப்பர் பைக், 50 லட்சம் மதிப்புள்ள தோனிக்காகவே ஸ்பெஷலாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட கான்ஃபெடரேட் ஹெல்கேட் X132 எனும் பைக், 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுஸூகி ஹயபூஸா பைக், 15 லட்சம் மதிப்புள்ள யமஹா தண்டர்கேட், 25 லட்சம் மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய், 35 லட்சம் மதிப்புள்ள டுகாட்டி 1098, 3 லட்சம் மதிப்புள்ள அப்பாச்சி RR310 என்று வெரைட்டியாக பைக்குகளை தனது கராஜில் நிறுத்தி வைத்திருக்கிறார் தல தோனி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Igor Stimac: “அதிகார வெறியர்களின் கைகளில் இந்திய கால்பந்து அணி” - இகோர் ஸ்டிமாக் குற்றச்சாட்டு!
மேலும் படிக்க: Virat Kohli: T20 என்றால் அலர்ஜியா? சொதப்பும் விராட் கோலி.. 4 போட்டியில் எடுத்த ரன் இவ்வளவுதானா! ஏமாற்றத்தில் ரசிகர்கள்