IND Vs AUS: கப்பா வேணும்..! மிரட்டிய இந்திய பவுலர்கள், சொதப்பிய பேட்ஸ்மேனக்ள் - ஆஸி., அதிக ரன், விக்கெட் வீழ்த்தியது யார்?
IND Vs AUS: பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
IND Vs AUS: இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை இழக்க, மோசமான பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்த இந்திய அணி
பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் பரபரப்புக்கு பஞ்சம்ன்றி நடந்து முடிந்துள்ளது. வெற்றியுடன் தொடரை தொடங்கினாலும், யாரும் எதிர்பாராத விதமாக 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. நடப்பு தொடரில் பந்துவீச்சாளர்கள் அபாரமான திறனை வெளிப்படுத்தினாலும், மோசமான பேட்டிங் காரணமாகவே இந்திய அணி தொடரை இழந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, நடப்பு தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் மற்றும் ரன்களை சேர்த்த வீரர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
BGT 2024-ல் இந்தியாவிற்காக அதிக ரன் சேர்த்த வீரர்கள்
வீரர்கள் | இன்னிங்ஸ் | ரன்கள் | 100/50 |
யஷஷ்வி ஜெய்ஷ்வால் | 10 | 391 | 1/2 |
நிதிஷ் குமார் ரெட்டி | 9 | 298 | 1/0 |
கே.எல். ராகுல் | 10 | 276 | 0/2 |
ரிஷப் பண்ட் | 9 | 255 | 0/1 |
விராட் கோலி | 9 | 190 | 1/0 |
சொதப்பிய பேட்ஸ்மேன்கள்:
மேற்குறிப்பிடப்பட்ட வீரர்களில் யஷஷ்வி ஜெய்ஷ்வாலை தவிர வேறு எந்த ஒரு வீரரின் சராசரியும் 40-ஐ எட்டவில்லை. அதற்கடுத்தபடியாக ராகுலின் சராசர் மட்டுமே 30-ஐ எட்டியுள்ளது. அதேநேரம், ஆஸ்திரேலிய அணிக்காக டிராவிஸ் ஹெட் 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 448 ரன்களை குவித்தார். நடப்பு தொடரில் அதிக ரன்களை சேர்த்ததும் அவர் தான். அதோடு, நடப்பு தொடரில் ரன் சேர்ப்பது பேட்ஸ்மேன்களுக்கு கடினமானதாக இருந்தாலும், இந்திய வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாகவே பந்துவீச்சாளர்கள் முயற்சிகள் அனைத்தும் வீணாய்போனது.
BGT 2024-ல் அதிக விக்கெட் எடுத்த இந்தியர்கள்:
வீரர்கள் | போட்டிகள் | விக்கெட்டுகள் | பெஸ்ட் |
பும்ரா | 5 | 32 | 6/76 |
சிராஜ் | 5 | 20 | 4/98 |
பிரஷித் கிருஷ்ணா | 1 | 6 | 3/42 |
நிதிஷ் குமார் ரெட்டி | 5 | 5 | 2/32 |
ஆகாஷ் தீப் | 2 | 5 | 2/28 |
மிரட்டிய பந்துவீச்சாளர்கள்:
இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் மைதானங்கள் வெவ்வேறு விதமாக அமைந்தன. ஆனாலும் இந்திய பந்துவீச்சாளர்கள் சூழலுக்கு ஏற்ப செயல்பட்டு திறம்பட விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். நடப்பு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இந்திய வீரர் பும்ரா தான் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தான் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸே 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஒருவேளை இந்திய பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களுக்கு நிகராக செயல்பட்டு இருந்தால், கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறாவிட்டாலும், கட்டாயம் தோல்வியை தவிர்த்து இருக்க முடியும். அதை செய்யாததால் தான், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி மற்றும் ரோகித் சர்மாவின் பேட்டிங் சொதப்பியதால் தான், இந்தியாவின் தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்துள்ளது.