Mitchell Starc In Test: டெஸ்டில் அதிக விக்கெட்.. டாப் 5க்குள் முன்னேற்றம்.. மிட்செல் ஜான்சனை பின்னுக்கு தள்ளிய மிட்செல் ஸ்டார்க்!
ஸ்டார்க் தற்போது டெஸ்டில் 315 விக்கெட்களை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-5 பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
2023 ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்போட்டியானது 4 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை ஸ்டார்க் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த 5 விக்கெட்களுடன் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய 5வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் படைத்தார்.
ஜான்சனை பின்னுக்குத் தள்ளிய ஸ்டார்க்:
இதன்மூலம், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனை ஸ்டார்க் பின்னுக்கு தள்ளினார். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஜான்சன் 313 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஸ்டார்க் தற்போது டெஸ்டில் 315 விக்கெட்களை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-5 பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்தார். இந்த டாப் 5 பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் ஷேன் வார்னர் மற்றும் கிளென் மெக்ராத் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியானும் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் லியான் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பட்டியலில், ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கிளென் மெக்ராத் 563 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், லியோன் மூன்றாவது இடத்திலும், டிகே லில்லி 355 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியல்:
பந்து வீச்சாளர்கள்
|
ஆண்டுகள்
|
போட்டிகள்
|
இன்னிங்ஸ்கள்
|
விக்கெட்கள்
|
ஷேன் வார்னர்
|
1992-2007 | 145 | 273 | 708 |
கிளென் மெக்ராத்
|
1993-2007 | 124 | 243 | 563 |
நாதன் லயன்
|
2011-2023 | 122* | 228 | 496 |
டிகே லில்லி
|
1971-1984 | 70 | 132 | 355 |
மிட்செல் ஸ்டார்க்
|
2011-2023 | 79* | 151 | 315 |
மிட்செல் ஜான்சன்
|
2007-2015 | 73 | 140 | 313 |
பிரட் லீ
|
1999-2008 | 76 | 150 | 310 |
எம்சி டெர்மட்
|
1984-1996 | 71 | 124 | 291 |
ஜேஎன் கில்லெஸ்பி
|
1996-2006 | 71 | 137 | 259 |
மிட்செல் ஸ்டார்க்:
மிட்செல் ஸ்டார்க் கடந்த 2010 ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஸ்டார்க் தனது சர்வதேச வாழ்க்கையில் இதுவரை 78 டெஸ்ட், 110 ஒருநாள் மற்றும் 58 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் டெஸ்டில் 27.61 சராசரியில் 315 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 22.1 சராசரியில் 219 விக்கெட்டுகளையும், டி20 சர்வதேச போட்டிகளில் 22.92 சராசரியில் 73 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
போட்டி சுருக்கம்:
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்காக ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். ஸ்டீவ் ஸ்மித் 184 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். இது தவிர தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 88 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் ஓலி ராபின்சன் மற்றும் ஜோஷ் டங்கு தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இது தவிர ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஜோடி தலா 1 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் 325 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிகபட்சமாக 98 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் 50 ரன்கள் எடுத்தார். இது தவிர ஜாக் க்ரோலி 48 ரன்கள் குவித்தார். ஒல்லி போப் 63 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில் கேமரூன் கிரீனுக்கு வீழ்ந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 2 என்ற கணக்கில் விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இது தவிர பேட் கம்மின்ஸ், நாதன் லயன், கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் 279 ரன்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி, 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றிபெற இன்னும் 257 ரன்கள் தேவையாக உள்ளது.