Ravichandran Ashwin: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் - மீண்டும் சாதனை படைப்பாரா அஸ்வின்?
செப்டம்பர் 26 ஆம் தேதி கான்பூரில் நடைபெற உள்ள இந்தியா - வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் படைக்கவிருக்கும் சாதனைகள் என்ன என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
செப்டம்பர் 26 ஆம் தேதி கான்பூரில் நடைபெற உள்ள இந்தியா - வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் படைக்கவிருக்கும் சாதனைகள் என்ன என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட்:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைத்தார்.
சாதனை படைப்பாரா அஸ்வின்:
இந்த நிலையில், செப்டம்பர் 26 ஆம் தேதி கான்பூரில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் படைக்க இருக்கும் சாதனைகளை பார்ப்போம்.வங்கதேசத்துக்கு எதிராக இதுவரை ஆடிய 7 டெஸ்டில் அஸ்வின் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜாகீர் கானின் சாதனையை முறியடிக்கவும், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைக்கவும் அவருக்கு இன்னும் மூன்று விக்கெட்டுகள் தேவை.
டெஸ்ட் போட்டிகளிம் நான்காவது இன்னிங்ஸில் ஷேன் வார்ன் (138), நாதன் லியான் (119), ரங்கனா ஹெராத் (115), முத்தையா முரளிதரன் (106), கிளென் மெக்ராத் (103) ஆகியோருக்குப் பிறகு 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய மற்றும் ஒட்டுமொத்த ஆறாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். அஸ்வின் இதுவரை விளையாடிய ஒன்பது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 போட்டிகளில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட்டை முந்துவதற்கும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் ஆவதற்கும் அவருக்கு நான்கு விக்கெட்டுகள் தேவை.
இரண்டாவது டெஸ்டில் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால், அவர் டெஸ்டில் 37 முறை ஐந்து விக்கெட்டுகள் என்ற ஷேன் வார்னின் சாதனையை முறியடிப்பார் மற்றும் அதிக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நம்பர் 2 இடத்தைப் பிடிப்பார்.
இலங்கையின் முரளிதரன் 67 பந்து வீச்சுடன் நம்பர்-1 இடத்தில் உள்ளார்.நேதன் லியானின் சாதனையை முறியடித்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைக்க, வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அஸ்வினுக்கு 8 விக்கெட்டுகள் தேவை.இதுவரை 101 டெஸ்டில் விளையாடி 522 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அஸ்வின், கான்பூர் டெஸ்டில் 9 பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்தால், லியானின் 530 விக்கெட்டுகள் என்ற சாதனையை முறியடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் 7வது இடத்தைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.