கிரிக்கெட் நாயகன் அஸ்வின்-ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா?

Published by: ஜான்சி ராணி

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்து 37 வது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் ஷேன் வார்னே சாதனையை சமன் செய்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 133 பந்துகள் களத்தில் நின்று 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 113 ரன்கள் எடுத்தார்.

2-வது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின், 21 ஓவர்கள் வீசினார். அதில், 88 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 37 வது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர்

என்ற ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே சாதனையை சமன் செய்து உள்ளார்.

முத்தையா முரளிதரன் (இலங்கை) - 67 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இவரது சாதனையையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது இடம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியல் அஸ்வின் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 11 - முதலிடம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) அதிக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் அஸ்வின் முதலிடம்.

ரவிச்சந்திரன் அஸ்வின் – 99   -முதலிடம்

நான்காவது இன்னிங்சில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் அஸ்வின் முதலிடம்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 522 விக்கெட்டுகள்

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் அஸ்வின் எட்டாவது இடத்தில் உள்ளார்.

புதிய சாதனை

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

வாழ்த்துகள் அஸ்வின்