மேலும் அறிய
Advertisement
Virat Kohli: ”கோலி பேர்ல எழுதுங்கோ”.. பாகிஸ்தானுக்கு எதிராக சதம், இந்தியாவின் மொத்த சாதனை பட்டியல் இதோ..!
ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரின் சாதனையை கோலி தகர்த்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி:
ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதின. இதில் அபாரமாக விளையாடிய கோலி 122 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சக வீரர் கே.எல். ராகுலும் சதம் விளாச, இந்திய அணி 356 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வீரராக கோலியும், இந்திய அணியும் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
சாதனைகள் பட்டியல்:
- பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா 356 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே இந்திய அணி எடுத்த ஸ்கோர் சமன் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியின் போது இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் நேற்றும் இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. ஆசியக்கோப்பை தொடரில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட நான்காவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
- நேற்றைய போட்டியில் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி 233 ரன்களை குவித்தது. இது ஆசியக்கோப்பை தொடரில் எந்தவொரு விக்கெட்டிற்கும் அமைந்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு முகமது ஹபீஸ் மற்றும் னசீன் ஜம்ஷெத் 224 ரன்கள் குவித்து இருந்த சாதனை தகர்க்கப்பட்டது.
- ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய வீரர்களால் அமைக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பும் இதுதான். முன்னதாக, 1996ம் அண்டு சச்சின் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து கூட்டணி 231 ரன்கள் சேர்த்ததே முந்தைய சாதனையாக இருந்தது
- மூன்றாவது விக்கெட்டிற்கு இந்திய அணியால் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் இதுவாகும்
- நேற்றைய போட்டியில் 99 ரன்களை குவித்தபோது, ஒருநாள் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்த 5வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
- சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸ்களில் 13 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், அதைவிட 54 இன்னிங்ஸ்கள் குறைவாக விளையாடி வெறும் 267 இன்னிங்ஸ்களிலேயே 13 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். இதன் மூலம் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
- இலங்கையின் பிரேமதாசா மைதானத்தில் கடைசியாக தான் விளையாடிய 4 போட்டிகளிலும் கோலி சதமடித்துள்ளார். இதேபோன்று, முன்னதாக தென்னாப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா மட்டுமே செஞ்சூரியன் மைதானத்தில் தொடர்ந்து 4 சதங்களை விளாசியுள்ளார்.
- உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்களின் பட்டியலில், 4 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ள சங்ககாரா சாதனையை கோலி சமன் செய்துள்ளார்
- 2003ம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் விளையாடி, இந்திய அணி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழப்பது இதுவே முதல்முறையாகும்
- ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 50+ ஸ்கோர் அடித்த ரிக்கி பாண்டிங்கின் (112) சாதனையை கோலி சமன் செய்துள்ளார்
- ஒரே ஆண்டில் கோலி ஆயிரம் ரன்களை கடப்பது 12வது முறையாகும்
- அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை குவித்த நான்காவது வீரர் என்ற கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
வணிகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion