Laal Singh Chaddha: லால்சிங் சத்தா படம் அவமானம்..! அமீர்கான் படத்தை விளாசிய பிரபல கிரிக்கெட் வீரர்..!
அமீர்கான் நடித்த லால்சிங்சத்தா திரைப்படம் அவமதிப்புக்குரியது, அவமானத்திற்குரியது என்று பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் பனேசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பிரபலமான பாலிவுட் நடிகர் ஆமீர்கான். இவரது நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான திரைப்படம் லால்சிங் சத்தா. இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல் தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்புகள் குவிந்து கொண்டே வந்தது.
இந்த நிலையில், லால்சிங் சத்தா படத்தைப் பார்த்துவிட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான மாண்டி பனேசர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், லால்சிங் தத்தா படத்தின் போஸ்டருடன் பாய்காட் என்ற புகைப்படத்தை பதிவிட்டு, “ வியட்நாம் போருக்கான தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த ஐ.க்யூ. ( அறிவுத்திறன் அளவு) கொண்ட நபர்களை பாரெஸ்ட் கம்ப் என்ற அமெரிக்க ராணுவத்தில் நியமித்தது. இந்த படம் (லால்சிங் சத்தா) இந்திய ராணுவத்தில் சீக்கிரயர்களின் பங்களிப்பை முழுவதும் அவமானப்படுத்தியுள்ளது. இந்த படம் அவமதிப்புக்குரியது. இழிவானது.” என்று பதிவிட்டுள்ளார்.
Forrest Gump fits in the US Army because the US was recruiting low IQ men to meet requirements for the Vietnam War. This movie is total disgrace to India Armed Forces Indian Army and Sikhs !!Disrespectful. Disgraceful. #BoycottLalSinghChadda pic.twitter.com/B8P2pKjCEs
— Monty Panesar (@MontyPanesar) August 10, 2022
மேலும், இந்திய ராணுவத்தில் பெரும்பான்மையாக உள்ள சீக்கியர்கள் ராணுவத்திற்காக ஆற்றிய பங்களிப்பை பறைசாற்றும் விதமாக அவர்கள் வாங்கிய விருதுகளின் பட்டியல்களை பட்டியலிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு,
1 Padma Vibhushan,
— Monty Panesar (@MontyPanesar) August 10, 2022
1 Padma Bhushan,
21 Indian Order of Merits,
14 Victoria Crosses,
2 Param Vir Chakras,
4 Ashoka Chakras,
8 Maha Vir Chakras,
24 Kirti Chakras,
64 Vir Chakras,
55 Shaurya Chakras,
375 Sena Medals,#BoycottLalSinghChadda
“ பத்மபூஷன் – 1, பத்மவிபூஷன் -1, இநு்திய ஆர்டர் ஆப் மெரிட்ஸ் -21, விக்டோரியா கிராசஸ் – 14, பரம்வீர் சக்ரா -2, அசோக சக்ராஸ் 4, மகாவீர் சக்ரா 8, கிர்தி சக்ராஸ் 24, வீர்சக்ரா 64, சவுர்ய சக்ராஸ் 55, சேனா பதக்கம் 375” என்று பட்டியலிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னணி நடிகர் படத்திற்கு பிரபல கிரிக்கெட் வீரர் எதிர்ப்ப தெரிவித்திருப்பது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்