First Female Umpire: ஆண்கள் கிரிக்கெட்டில் முதன்முறையாக களமிறங்கிய பெண் அம்பயர்..! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்..!
இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையேயான ஆண்கள் போட்டியில் முதன்முறையாக பெண் அம்பயர் கள நடுவராக களமிறங்கி அசத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். கிரிக்கெட் போட்டிகளில் வீராங்கனைகளாக மட்டுமின்றி கள நடுவர்களாகவும் அசத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியிலும் பெண்கள் அம்பயர்களாக அசத்தினர்.
நியூசிலாந்து நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் பெண் அம்பயர்:
நியூசிலாந்தின் துன்டின் நகரில் நடைபெற்ற நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் கள நடுவராக கிம் காட்டன் என்ற பெண் களமிறங்கினார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆண்கள் கிரிக்கெட்டிற்கு பெண் ஒருவர் கள நடுவராக களமிறங்கியிருப்பது இதுவே முதன்முறை ஆகும். ஆண்கள் கிரிக்கெட்டில் கள நடுவராக களமிறங்கிய கிம் காட்டனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
History today for umpire Kim Cotton who becomes the first female umpire to stand in a men’s international match between two @ICC full member countries 🤝#NZvSL #CricketNation pic.twitter.com/EI8C1RJt4d
— BLACKCAPS (@BLACKCAPS) April 5, 2023
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக ஐ.சி.சி.யின் நிரந்தர உறுப்பினர்களான நாடுகள் மோதும் போட்டிக்கு பெண் ஒருவர் கள நடுவராக இருப்பது இதுவே முதன்முறை ஆகும்.
அனுபவம் வாய்ந்தவர்:
48 வயதான கிம் காட்டன் இதுவரை 54 மகளிர் டி20 போட்டிகளுக்கு அம்பயராக இருந்துள்ளார். அதாவது கள அம்பயராக மட்டுமின்றி டிவி அம்பயராகவும் பணிபுரிந்துள்ளார். இதுதவிர 2018ம் ஆண்டு முதல் 24 ஒருநாள் போட்டிகளுக்கும் அம்பயராக இருந்துள்ளார். கிம்காட்டன் கடந்த 2020ம் ஆண்டு நியூசிலாந்து நகரில் உள்ள ஹாமில்டனில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து ஆண்கள் போட்டிக்கு டிவி அம்பயராக பணியாற்றியுள்ளார்.
புதிய வரலாறுக்கு படைத்துள்ள கிம் காட்டன் 3 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, கடந்த 2021-2022ம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்காக சிட்னியில் நடந்த போட்டியில் கிளெர் போலோசக் நான்காவது அம்பயராக இருந்துள்ளார்.
காட்டன் அம்பயராக களமிறங்கிய இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட் செய்து 19 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து 15 ஓவர்களில் 146 ரன்களை எட்டி அபார வெற்றி பெற்றது. டிம் செய்பெர்ட் 79 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் மில்னே 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மேலும் படிக்க: IPL 2023: மும்பை அணி ஃபைனலுக்கு செல்ல வாய்ப்பே இல்லை.. அடித்து சொல்கிறார் டாம் மூடி!
மேலும் படிக்க: PBKS vs RR: பஞ்சாப்பிற்காக பட்டையை கிளப்புவாரா தமிழன் ஷாரூக்கான்..? தாறுமாறு சம்பவம் காத்திருக்கா?