மேலும் அறிய

PBKS vs RR: பஞ்சாப்பிற்காக பட்டையை கிளப்புவாரா தமிழன் ஷாரூக்கான்..? தாறுமாறு சம்பவம் காத்திருக்கா?

பஞ்சாப் அணிக்காக இன்றைய போட்டியில் களமிறங்கும் ஷாரூக்கான் ராஜஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்வாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

நடப்பு ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் ஆடும் லெவனில் அசத்தி வருகின்றனர். இந்த நிலையில், பலம் மிகுந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கவுகாத்தி மைதானத்தில் பஞ்சாப் அணி ஆட உள்ளது. பஞ்சாப் அணிக்கு கடந்த 3 சீசன்களாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் ஷாரூக்கான்.

ஷாரூக்கான்:

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி பேட்டிங்கில் மிரட்டும் வல்லமை கொண்டவர். கடந்த முறை நடைபெற்ற ஏலத்தில் இவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் மற்றும் சென்னை அணி போட்டி போட்டது. இறுதியில் பஞ்சாப் அணியே பல கோடிகளை கொடுத்து ஷாரூக்கானை தக்கவைத்தது.

பஞ்சாப் அணி தன்னுடைய முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தங்களது வெற்றியை தொடரும் முனைப்பில் இன்று களமிறங்கும் பஞ்சாப் அணியைவிட ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் மிகுந்த வலிமையுடன் உள்ளது.

கலக்குவாரா ஷாரூக்?

ராஜஸ்தான் அணி இமாலய இலக்கை ஏதேனும் நிர்ணயித்தாலோ, ராஜஸ்தான் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்க வேண்டுமென்றாலோ நிச்சயம் பஞ்சாப் அதிரடி காட்ட வேண்டும். அதற்கு ஷாரூக்கானின் பங்களிப்பும் தவிர்க்க முடியாதது ஆகும். ட்ரெண்ட் போல்ட், ஹோல்டர், அஸ்வின், சாஹல் என்று உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் ராஜஸ்தானில் உள்ளனர்.

பஞ்சாபின் பேட்டிங்கை பொறுத்தவரையில் தவான், ராஜபக்சே, சிக்கந்தர் ராசா, சாம்கரண் மற்றும் நாதன் எல்லீஸ் மட்டுமே சர்வதேச அரங்கில் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களுக்கு இணையாக அதிரடி காட்டக்கூடிய ஆற்றல் கொண்டவர் ஷாரூக்கான். இவரது பேட்டிங் திறனும், சிக்ஸர் அடிக்கும் ஆற்றலும் நிச்சயம் பஞ்சாபிற்கு பலம் சேர்க்கும். பல நெருக்கடியான தருணங்களில் பஞ்சாப் அணிக்கு பக்கபலமாக இருந்துள்ளார். இந்த நிலையில், இன்றைய போட்டியிலும் ராஜஸ்தான் பந்துவீச்சை ஷாரூக்கான் துவம்சம் செய்வாரா? குஜராத்தை சாய் சுதர்சன் கரை தேற்றியது போல ஷாரூக்கான் கரை தேற்றுவாரா? என்பதை இன்று பார்க்கலாம்.

28 வயதான மசூத் ஷாரூக்கான் வலது கை பேட்ஸ்மேன், வலது கை பந்துவீச்சாளரும் ஆவார். 11 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 1 சதம், 4 அரைசதங்களுடன் 592 ரன்களும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 40 போட்டிகளில் ஆடி 7 அரைசதங்களுடன் 840 ரன்களும், 65 டி20 போட்டிகளில் ஆடி 720 ரன்களும் எடுத்துள்ளார். தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் கோவை மற்றும் மதுரை அணிகளுக்காக ஆடியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் 20 போட்டிகளில் ஆடி 281 ரன்களை எடுத்துள்ளார்.

மேலும் படிக்க: Superhero Dhoni: 'தோனிக்கு சூப்பர் ஹீரோ ஜெர்சி..' சிஎஸ்கேவிடம் கேட்ட ஆனந்த் மஹிந்திரா… ரசிகர்கள் கொட்டிய AI டிசைன்கள்!

மேலும் படிக்க:  Dasun Shanaka: தொடர் புறக்கணிப்பு… மீண்டும் மீண்டும் முயற்சி.. ஒரு வழியாக ஐபிஎல்-லில் நுழைந்த தசுன் ஷனகா..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget