Kagiso Rabada: 29 வயதில் 300 விக்கெட்; ரபாடா செய்த உலக சாதனை என்ன தெரியுமா?
தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆறாவது தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ககிசோ ரபாடா:
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (அக்டோபர் 21) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. அதன்படி, வங்கதேச அணி 35.2 ஓவர்கள் முடிவின் படி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை 9 ஓவர்கள் வீசியுள்ள ககிசோ ரபாடா 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.66 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 116 இன்னிங்ஸ்களில் 301 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இவருடைய பந்துவீச்சு ஆவரேஜ் 22.8, ஒரு ஓவருக்கு கொடுக்கப்படும் ரன் விகிதம் 3.36 என்று இருக்கிறது. ஒரு இன்னிங்ஸில் 14 முறை 4 விக்கெட்டும் 14 முறை 5 விக்கெட்டும் கைப்பற்றி இருக்கிறார்.
இவருடைய பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 39.41 என இருக்கிறது. இந்த பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் என்பது எத்தனை பந்துக்கு ஒரு முறை விக்கெட் கைப்பற்றுகிறார்கள் என்கின்ற சராசரி அளவு. இந்த வகையில் ரபாடா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 39 பந்துகளுக்கு ஒருமுறை விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் குறைந்த ஸ்ட்ரைக் ரைட்டில் 300க்கும் மேற்பட்ட விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில், 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இடத்தைப் பிடித்து சாதித்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்டில் அதிக விக்கெட்டுகள்:
டேல் ஸ்டெய்ன் - 93 போட்டிகளில் 439 விக்கெட்டுகள்
ஷான் பொல்லாக் - 108 போட்டிகளில் 421 விக்கெட்டுகள்
மகாயா நிடினி - 101 போட்டிகளில் 390 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
ஆலன் டொனால்ட் - 72 போட்டிகளில் 330 விக்கெட்டுகள்
மோர்னே மோர்கல் - 86 போட்டிகளில் 309 விக்கெட்டுகள்
ககிசோ ரபாடா - 65 போட்டிகளில் 301 விக்கெட்டுகள்
ஜாக் காலிஸ் - 166 போட்டிகளில் 292 விக்கெட்டுகள்
வெர்னான் பிலாண்டர் - 64 போட்டிகளில் 224 விக்கெட்டுகள்
கேசவ் மஹராஜ் - 53 போட்டிகளில் 171 விக்கெட்டுகள்
ஹக் டெய்ஃபீல்ட் - 37 போட்டிகளில் 170 விக்கெட்டுகள்
தென்னாப்பிரிக்காவுக்காக அதிவேகமாக 300 டெஸ்ட் விக்கெட்டுகள் (எடுத்த போட்டிகள் )
டேல் ஸ்டெய்ன் - 61 போட்டிகள்
ஆலன் டொனால்ட் - 63 போட்டிகள்
ககிசோ ரபாடா - 65 போட்டிகள்
ஷான் பொல்லாக் - 74 போட்டிகள்
மகாயா ந்தினி - 74 போட்டிகள்