Jemimah Rodrigues Photos: கோலி, தோனி... அடுத்து நான்.. இலைட் குரூபில் இணைந்தேன்... ஜெமிமா ரோட்ரிக்ஸ் வைரல் பதிவு
ட்விட்டர் தளத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளில் ஒருவர் ஜெமிமா ரோட்ரிக்ஸ். இவருக்கு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர் பட்டாளம் அதிகமாக உள்ளன. இதன்காரணமாக இவர் போடும் பதிவுகள் வேகமாக வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது மீண்டும் இவருடைய பதிவு ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் தன்னுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “நான் இலைட் வீரர்களின் பட்டியலில் இணைந்துவிட்டேன்” எனப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ஒரு படத்தை சேர்த்துள்ளார். அதில் முதலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் ஸ்டெம்பிங் அவுட் ஆவதிலிருந்து தப்பிவது போல் படங்கள் உள்ளன.
View this post on Instagram
அந்தப் படத்துடன் சேர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸூம் அதேமாதிரி ஸ்டெம்பிங் அவுட்டை தவிர்க்கும் வகையில் படமும் உள்ளது. அவரின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Hehe full split 😱 what can’t jemi do?? 🤔🤔
— Yastika Bhatia (@YastikaBhatia) August 16, 2022
You are a blessing Sister... That shot making room to hit a drive over cover is my favourite shot. More power to you. So proud of you!
— Ritesh (@Ritesh87918317) August 16, 2022
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்