மேலும் அறிய

England WC Squad: ஹாரி ப்ரூக்கிற்காக ஜேசன் ராயை கழற்றிவிட்ட இங்கிலாந்து அணி - உலக்கோப்பைக்கான அணி அறிவிப்பு

உலகக்கோப்பை தொடருக்காக ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய்க்கு பதிலாக, மோசமான ஃபார்மில் உள்ள ஹாரி ப்ரூக்கிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடர்:

உலகக்கோப்பை ஒருநாள் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் தொடரை நடத்தும் இந்தியாவோடு,  பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து என 10 அணிகள் பங்கேற்க உள்ளன. தொடரில் 45 லீக் போட்டிகள் உட்பட மொத்தம் 48 போட்டிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெற உள்ளன. போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன.

தயாராகும் அணிகள்:

இதனிடையே, செப்டம்பர் 28ம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தங்களது சார்பில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள, 15 பேரின் விவரங்களை உறுதி செய்ய வேண்டும். அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள தங்களது வீரர்களின் விவரங்களை வெளியிட்டுவிட்டன. அந்த வரிசையில் இங்கிலாந்தும் உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அணியின் விவரம்:

ஜோஸ் பட்லர் தலைமயிலான அணியில் 15 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் ஏற்கனவே அறிவித்தபடி, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பென் ஸ்டோக்ஸ், உலகக்கோப்பை தொடருக்காக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். முதுகு வலி காரணமாக அவதிப்படும் ஜேசன் ராய்க்கு பதிலாக ஹாரி ப்ரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ப்ரூக்கின் சராசரி வெறும் 12 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசிய டேவிட் மாலனும் அணியில் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சரும் அணியில் சேர்க்கப்படவில்லை.  கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணியில் இருந்த ஜோஸ் பட்லர், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், அடில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் நடப்பாண்டு தொடரிலும் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ். 

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து:

கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை, பவுண்டரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வரும் அக்டோபர் 5ம் தேதி, அகமதாபாத்தில் தொடங்கும் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Embed widget