Watch Video:அயர்லாந்து ஜிம்பாப்வே போட்டி;பவுண்டரியை தடுக்க நினைத்த பீல்டர்..5 ரன்களை விட்டுக் கொடுத்த சோகம்!
அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் வேடிக்கையான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அயர்லாந்து - ஜிம்பாப்வே போட்டி:
அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்த போட்டி கடந்த ஜூலை 25 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 210 ரன்கள் எடுத்தது. அடுத்தாக பேட்டிங்கை தொடங்கிய அயர்லாந்து அணி 250 ரன்களை எடுத்தது.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
வைரல் வீடியோ:
நான்காவது நாளில் இரண்டாவது இன்னிங்ஸின் 18 ஆவது ஓவரை ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் கரவா வீசினார். இரண்டாவது பந்தை எதிர்கொண்ட மெக்ப்ரைன் கவர் திசையில் பந்தைத் தட்ட அது பவுண்டரி லைனுக்கு ஓடியது. பந்தை விரட்டிய டெண்டாய் சதாரா எல்லையில் பந்தைத் தடுத்தார். சதாரா வேகமாக ஓடிச் சென்றதால் தடுப்புகளுக்குப் பின்னால் சென்றுவிட்டார்.
வேறு எந்த பீல்டரும் அப்போது அருகில் இல்லாததால், சதாராவே மீண்டும் வந்து பந்தை எடுத்து வீசினார்.
ONE OF THE RARE OCCASIONS IN CRICKET...!!! 😲
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 29, 2024
A Zimbabwean fielder saves the four, but the batter ran 5 runs. 😄pic.twitter.com/0AAhdi62Pf
ஆனால், அதற்குள்ளாக பேட்டர்கள் 5 ரன்களை ஓடிவிட்டனர். பவுண்டரியைத் தடுக்கப்போய் 5 ரன்களை ஜிம்பாப்வே அணியினர் விட்டுக்கொடுத்துவிட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பவுண்டரி விட்டிருந்தால் கூட 4 ரன்கள் மட்டும் தான் கிடைத்திருக்கும். உயிரை கொடுத்து பீல்டிங் செய்து 5 ரன்கள் விட்டுக்கொடுத்துவிட்டாரே என்பது போன்ற கமெண்டுகளை கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க: Lakshya sen: இந்தியர்கள் அதிர்ச்சி..! ஒலிம்பிக்கில் நடந்த மோசம்? பேட்மிண்டன் வீரர் லக்க்ஷயா சென்னின் வெற்றியை நீக்கி அறிவிப்பு
மேலும் படிக்க:Paris 2024 Olympics: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பரிசு..! பெட்டியில் இருப்பது என்ன தெரியுமா?