மேலும் அறிய

IPL Retention 2022: “எல்லா நாளும் கார்த்திகை... லா...ல...லா...” - சிஎஸ்கேவுக்கு டு ப்ளெசி, பிராவோ வாழ்த்து

டு ப்ளெசி, பிராவோ, ரெய்னா, ஷர்துல் தாகூர், தீபக் சஹார் உள்ளிட்ட சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சுவாரஸ்யமான பட்டியலாக வெளியாகி இருக்கிறது ஐபிஎல் 2022 தொடருக்காக தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரம். இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தது. 

அதன்படி, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நேற்று அறிவித்தது.

அந்த வரிசையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான்கு பேர் தக்க வைக்கப்பட்டனர். இதில் எதிர்ப்பார்த்த நான்கு வீரர்களின் பெயர் இடம் பெற்றிருந்தாலும், எதிர்ப்பார்க்காத வகையில் தோனியைவிட அதிக விலை கொடுத்து தக்க வைக்கப்பட்டிருக்கிறார் ஜடேஜா. சென்னை அணியில் எப்பொழுதும் நீங்கா இடம் பிடிக்கும் தோனியை பின்னுக்குத்தள்ளி ஜடேஜா 16 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த ஐபிஎல் ரிடென்ஷனில் அதிக ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்ட வீரராக ஜடேஜா முன்னிலை பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், டு ப்ளெசி, பிராவோ, ரெய்னா, ஷர்துல் தாகூர், தீபக் சஹார் உள்ளிட்ட சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், யெல்லோ ஆர்மி ரசிகர்கள் இவர் இருந்திருக்க வேண்டும், அவர் இருந்திருக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, கடைசி சீசனில் கூட அதிரடியாக விளையாடிய டுப்ளெசி இல்லாதது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்திருக்கிறது.

IPL Retention 2022: “எல்லா நாளும் கார்த்திகை... லா...ல...லா...” - சிஎஸ்கேவுக்கு டு ப்ளெசி, பிராவோ வாழ்த்து

ஆனால், எப்போதும் ஒரே குடும்பம், சூப்பர் குடும்பம், பாசக்குடும்பம் என மெச்சிக் கொள்ளும் சிஎஸ்கேவில், இப்போது தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களை பட்டியலிட்டு சிஎஸ்கே வெளியிட்டிருக்கும் பதிவுக்கும் டு ப்ளெசி, பிராவோ கமெண்ட் செய்திருக்கின்றனர். ப்ராவோ, அந்த பதிவிற்கு “வாழ்த்துகள்” எனவும், டுப்ளெசி, கைதட்டல்களையும் கமெண்ட் செய்திருக்கிறார்.

இதனால், மீண்டும் சிஎஸ்கே ரசிகர்கள், “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை லா...ல..லா...” என பாடி வருகின்றனர்.

மேலும் படிக்க: IPL RETENTION 2022: சிலர் காலி... பலர் ஜாலி... ஐபிஎல் 2022 மாநாட்டின் ‛ரிபீட்டு’ ஹீரோஸ் இவங்க தான்!

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget