IPL 2025 Auction:சின்னசாமி ஸ்டேடியத்தில் சூப்பர் ஆட்டம்;ரச்சினை தட்டி தூக்கும் பெங்களூரு? ஐபிஎல்லில் நடக்கும் மாற்றம்
மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரச்சின் ரவீந்திராவை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரச்சின் ரவீந்திராவை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 402 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திரா தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 157 பந்துகள் களத்தில் நின்ற அவர் 134 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரச்சின் ரவீந்திராவை தங்களது அணிக்கு எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான மூன்று காரணங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
போட்டியின் சூழலுக்கு ஏற்ப மாறுபவர்:
ரச்சின் ரவீந்திரா போட்டியின் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விளையாடுபவர். போட்டியின் சூழலுக்கு ஏற்ப விளையாடும் வீரர்கள் பெங்களூரு அணியில் இல்லை என்ற குற்றச்சாட்டு அடிக்கடி வைக்கப்படும் ஒன்று. இச்சூழலில் ரச்சின் ரவீந்திராவை பெங்களூரு அணி எடுத்தால் அந்த அணிக்கு அது நல்ல வாய்ப்பாக அமையும்.
மாற்று தேர்வாக இருப்பார்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தக்கவைப்படுவார்கள்.கேமரூன் கிரீன், வில் ஜாக்ஸ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதானால் ரச்சின் ரவீந்திராவை பெங்களூரு அணி விலைக்கு வாங்கலாம். முக்கியமான நேரங்களில் ரச்சின் பந்து வீசவும் தயாராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னசாமி மைதானத்தில் சாதனை:
ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணிக்காக விளையாடு வந்தாலும் அவரது பூர்விகம் பெங்களூரு தான். அவரது குடும்பம் கூட அங்கு தான் வசிக்கிறது. அதே போல், சின்னசாமி மைதானத்தில் விளையாடிய ஒரு சில போட்டிகளிலும் ரச்சின் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிகபட்சமாக 61 ரன்களை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.